நாம் யார் ? (Who We Are?)
வளமையான வாழ்விற்காக இளமைகளை தொலைத்த துர்பாக்கியசாலிகள் ! வறுமை என்ற சுனாமியால் கடலோரம்கரை ஒதுங்கிய அடையாளம் தெரிந்தநடை பிணங்கள் ! சுதந்திரமாக சுற்றி திரிந்தபோது வறுமை எனும் சூறாவளியில் சிக்கிய திசை மாறிய பறவைகள் !நிஜத்தை தொலைத்துவிட்டுநிழற்படத்திற்கு முத்தம் கொடுக்கும் அபாக்கிய சாலிகள் ! தொலைதூரத்தில்இருந்து கொண்டேதொலைபேசியிலேகுடும்பம் நடத்தும் தொடர் கதைகள் ! கடிதத்தை பிரித்தவுடன் கண்ணீர் துளிகளால் கானல் நீராகிப் போகும் மனைவி எழுதியஎழுத்துக்கள் ! ஈமெயிலிலும் இண்டர்நெட்டிலும் இல்லறம் நடத்தும் கம்ப்யூட்டர் வாதிகள் ! நலம் நலமறியஆவல் என்றால் பணம் பணமறிய ஆவல் என கேட்கும் ஏ . டி . எம் . மெஷின்கள் ! பகட்டானவாழ்க்கை வாழபணத்திற்காக வாழக்கையை பறி கொடுத்த பரிதாபத்துக்குரியவர்கள் ! ஏ சி காற்றில் இருந்துக் கொண்டே மனைவியின்மூச்சுக்காற்றைமுற்றும் துறந்தவர்கள் !வளரும் பருவத்திலே வாரிசுகளைவாரியணைத்து கொஞ்சமுடியாத கல் நெஞ்சக்காரர்கள் ! தனிமையிலே உறங்கும் முன் தன்னையறியாமலே தாரை தாரையாகவழிந்தோடும்கண்ணீர் துளிகள் ! அபஷி என்ற அரபி வார்த்தைக்கு அனுபவத்தின் மூலம் அர்த்தமானவர்கள் !உழைப்பு என்றஉள்ளார்ந்த அர்த்தத்தை உணர்வுபூர்வமாகஉணர்ந்தவர்கள்!
முடியும் வரைஉழைத்து விட்டுமுடிந்தவுடன்ஊர் செல்லும் நோயாளிகள் ! கொளுத்தும் வெயிலிலும் குத்தும் குளிரிலும் பறக்கும் தூசிகளுக்கும் இடையில் பழகிப்போன ஜந்துகள் ! பெற்ற தாய்க்கும் வளர்த்த தந்தைக்கும் கட்டிய மனைவிக்கும் பெற்றெடுத்த குழந்தைக்கும் உற்ற குடும்பத்திற்கும்
உண்மை நண்பர்களுக்காகவும்இடைவிடாது உழைக்கும் தியாகிகள்
No comments:
Post a Comment