உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடேமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்
Tuesday, July 7, 2009
இசைஞானி ரசிகன்
இளையராஜா ஒரு சகாப்தம்
இளையராஜா அவ்வளவுதானா? என கேள்வி கேட்கும் விதமாக இந்தப் பதிவுக்கு தலைப்பிட நினைத்தேன். ஆனால் என்னால் அப்படி இடமுடியவில்லை காரணம் நான் கடைந்தெடுத்த இசைஞானி ரசிகன். கடந்த சில காலமாக ராஜாவைப்பற்றி பல கருத்துகள் வலைகளிலும் சரி சில களங்களிலும் குழுமங்களிலும் ஏன் நேரில் கூட விவாதித்துக்கொள்ளப்படுகின்றது. 70களின் முடிவிலும் 80களில் முழுவதும் 90களின் ஆரம்பத்திலும் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக இசையுலகை தன் ஆர்மோனியப்பெட்டியில் வைத்திருந்தவர் இளையராஜா என்றால் மிகையாகாது. இந்தப்பதிவிற்க்கு மூலகாரணம் அண்மையில் வால்மீகி படத்தைப்பார்த்துவிட்டு பலர் ராஜாவின் இசை சரியில்லைஎனக் கூறுகின்றார்கள். படம் இன்னும் பார்க்கவில்லை, பாடல்கள் கேட்கவில்லை அதனால் இந்தப்படத்தினைப் பற்றி என்னால் எதுவும் கூறமுடியாது. ஒருமுறை ஹாய் மதனில் ஒருவர் கேள்வி ஒன்று கேட்டிருந்தார் "சிவாஜிகணேசன், அசாரூதீன், இளையராஜா மூவரும் இனி ஓய்வெடுக்கலாமா?" என. அதற்க்கு மதன் "இவர்கள் மூவரும் சாதனையாளர்கள் இவர்களின் சாதனைகளை இன்னொருவர் முறியடித்தாலும் இவர்கள் தான் முன்னோடிகள்" என பதில் அளித்திருந்தார்.ஆக இளையராஜா அண்மைக்காலங்களில் அவ்வளவாக சேபிக்காவிட்டாலும் முன்னைய காலங்களில் அவர் தந்த பாடல்களை மிஞ்ச இன்னொருவர் இல்லை என்றே சொல்லலாம். அதுமட்டுமல்ல இன்றைக்கும் அவர் தான் பின்னணி இசையில் நம்பர் ஒன். ஒரு கலைஞனுக்கு தன் நாட்டை விட ஊரைவிட இன்னொரு ஊரில் தான் மரியாதை அதிகம். அதனால் தான் என்னவோ இளையராஜாவை மலையாளத் திரையுலகம் தத்தெடுத்துவிட்டது இசைப்புயலை மும்பை தத்தெடுத்துவிட்டது. 80களின் இசைபற்றி ஆராயவே தேவையில்லை. ராஜா கொடிகட்டிப்பறந்த காலமது.இளையராஜாவுக்காகவே ராமராஜன் ராஜ்கிரண் படம் எல்லாம் பார்த்து தொலைத்தகாலமது90களின் தொடக்கத்தில் ரகுமானின் வரவால் இளையராஜாவின் படங்களின் எண்ணிக்கை குறைந்ததே அல்லாமல் தரம் குறையவில்லை. அந்தகாலத்தில் வெளிவந்த காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு போன்ற படங்களில் மீண்டும் தன் இருப்பை மற்றவர்களுக்கு காட்டினார். பின்னர் ஹேராம், விருமாண்டியில் உச்சத்திற்க்கு வந்த இசைராஜா மும்பை எக்ஸ்பிரசை கமலுடன் சேர்ந்து மிஸ் பண்ணிவிட்டார். இடையில் பாலாவின் ஆஸ்தான இசையமைப்பாளராகி சேதுவில் எங்கே செல்லும் இந்தப்பாதை தேடி பிதாமகனில் இளங்காற்று வீசி நான் கடவுளில் ஓம் சிவோஹம் என உருத்திர தாணடவமே ஆடினார். ரமணாவில் இரண்டே இரண்டு பாடல்களிலும் பின்னணியிலும் கேப்டனுக்கு முருகதாசுடன் மறுவாழ்வு கொடுத்தார். இடையில் சில படங்களுக்கு இவர் இசையமைத்திருந்தாலும் நல்ல கதை அமைப்பு இல்லாதபடியால் பாடல்களும் எடுபடவில்லை. அதே நேரம் அந்தக்காலத்தில் கதையே இல்லாத பல படங்கள் இவரின் பாடல்களுக்காகவே ஓடின. ராஜாவின் இன்றைய பின்னடைவிற்க்கு என்னால் கூறக்கூடியவை காரணங்கள் :1. புதிய தலைமுறைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளாமை முக்கிய காரணமாகும். மகன் யுவன் சங்கர் ராஜா புதிய தலைமுறைக்கேட்ப இசையமைக்கும்போது இவரால் அதனைச் செயல்படுத்தமுடியவில்லை. இதற்க்கு தலைமுறை இடைவெளியும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.2. எவ் எம் ரேடியோக்கள் மியூசிக் சேனல்களின் வருகை. இவை இரண்டும் பெரும்பாலும் இளசுகளை டார்கட் பண்ணியே நடைமுறைப்படுத்தப்படுவதால் ராஜாவைவிட ரகுமான், ஹாரிஸ், யுவன் போன்றோரே இவர்களின் தெரிவாக இருக்கின்றது. ஆஹா எவ் எம்மில் பவதாரணி நடத்திய ராஜாங்கமும் இலங்கையில் சக்தி எவ் எம்மில் ஒளிபரப்புகின்ற ராஜாங்கமும் மட்டும் விதிவிலக்காக இருக்கின்றன. 3. ராஜாவின் கெடுபிடிகளை நினைத்து இளம் இயக்குனர்கள் பயத்தினால் இவரை நாடுவது குறைவு, அண்மையில் கூட மிஷ்கினின் நந்தலாலாவில் சர்ச்சை ஏற்பட்டது. அதாவது இளையராஜா யூசர் பிரண்ட்லி இல்லையென செய்தி அடிபடுகின்றது. சிலர் சொல்வதுபோல் அவரிடம் சரக்கில்லை என்பது கடைந்தெடுத்த பொய். சரக்கிருக்கு அதனை இந்தக்காலத்திற்க்கு ஏற்ப கொடுக்க தவறிவிட்டார் அல்லது இந்தக்காலத்தின் சில வடிவங்களை அன்றே தந்துவிட்டார் எனலாம். உதாரணமாக விக்ரம் படத்தின் வனிதாமணி வனம்மோகினி பாடலின் முன்னால் வரும் "கண்ணே கட்டிக்கவா ஒட்டிக்கவா" தமிழில் முதல் வந்த ராப் என இசைவல்லுனர்கள் சொல்கிறார்கள். வால்மீகி படத்தின் இசைக்கு அதன் தயாரிப்பாளர்களான விகடனும் ஒரு காரணமாக இருக்கலாம். காரணம் ஆரம்ப நாட்களில் விகடனால் இளையராஜா கண்டுகொள்ளப்படவில்லை. இதனை தற்போது அவர்கள் வெளியிடும் விகடன் பொக்கிசத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம். ராஜா கோலோச்சிய பல படங்களின் விமர்சனங்களில் அவரைப்பற்றி ஒரு வார்த்தைகூட விகடன் எழுதவில்லை. இதனைப் பலர் விகடன் இணையப்பதிப்பில் பின்னூட்டங்களில் கூடச் கூறியிருந்தார்கள். ஆகவே அதற்க்குப் பழிவாங்கும் வகையில் இசையை சொதப்பினரா? இல்லை இந்தப் படத்திற்க்கு இவ்வளவு போதும் என நினைத்தாரா? (விகடனுக்கு மட்டுமா சிண்டு முடியத்தெரியும்).இசையில் பல சாதனைகள் செய்த மனிதரை மத்திய மாநில அரசுகள் தான் கண்டுகொள்ளவில்லை என்றால் பதிவுலகத்திலும் எத்தனை எத்தனை எதிர்க்கருத்துக்கள். ஒருமுறை விவேக் சொன்னதுபோல் இளையராஜா வெளிநாடு ஒன்றில் பிறந்திருந்தால் அவரை அங்கே கொண்டாடியிருப்பார்கள். தவறிப்போய் அவர் தமிழ்நாட்டில் பண்ணைபுரத்தில் பிறந்தது அவரது துரதிஷ்டம்தான்.
எழுதியது வந்தியத்தேவன் at
document.write(tamilize('10:26 PM'))
இரவு 10:26 8 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் இசை, இளையராஜா, சினிமா
நியூயோர்க் திரைவிமர்சனம்
விமர்சனத்திற்க்கு முன்னாள் சின்ன ஒரு பிளாஷ் பேக் :2001 செப்டம்பர் 11 உலகையே புரட்டிப்போட்ட இரட்டைக்கோபுர தாக்குதலின் பின்னர் அமெரிக்காவில் வெளிநாட்டைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1200க்கு மேற்பட்டவர்கள் அமெரிக்காவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். மூன்று வருடத்தின் பின்னர் பலர் தீவிரவாதி என எந்தவித ஆதாரமும் இல்லாதபடியால் விடுதலை ஆனார்கள். விடுதலையான பலர் மன உளைச்சலுக்கும், உட்காயங்களும் ஆளானார்கள். பின்னர் ஜோர்ஜ் புஷ் தான் யாரையும் சித்திரவதை செய்யச் சொல்லி உத்தரவிடவில்லை என தெரிவித்தார். தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா தான் பதவி ஏற்பதற்க்கு சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் சித்திரவதை முகாம்களை மூடப்போவதாக அறிவித்தார்.இனி நியூயோர்க்கினுள் செல்வோம்.யாஷ் சோப்ராவின் தயாரிப்பில் கபீர் கானின் இயக்கத்தில் ஜோன் ஆப்ரகாம், கத்ரினா கைவ் இர்பான் கான் மற்றும் நீல் நித்தின் முகேஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் ஹிந்தி திரைப்படம் நியூயோர்க். மேலே கூறப்பட்ட செப்டம்பர் 11 தாக்குதலை அடிப்படையாக வைத்து முற்றுமுழுதாக அமெரிக்காவில் படமாக்கப்பட்டுள்ளது. ஓமர்( நீல் நித்தின் முகேஷ்)ஒரு நாள் எவ்பிஐ(FBI)இனால் கைது செய்யப்படுகின்றான். அவனை விசாரிக்கும் எவ்பிஐ அதிகாரியான ரொஷான்(இர்பான் கான்)அவனுக்கு அவனுடைய சினேகிதன் சாம் என்ற சமீர் ஷேக்குக்கும் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டுகிறார். இதனை மறுத்த ஓமர் தாம் இருவரும் அப்பாவிகள் என்று நியூயோர்க் ஸ்டேட் யூனிவர்சிட்டியில் 1999ல் ஒன்றாகபடித்தவர்கள் எனவும் கூறகின்றான். 1999ல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு உயர்கல்விக்காக வரும் ஓமர் அங்கே சாம் என்ற அமெரிக்க இந்தியன், மாயா என்ற அமெரிக்க இந்தியன்(கத்ரினா கைவ்)ஆகியோருடன் நட்பாக இருக்கும் அதேவேளை ஒருதலையாக மாயாவைக் காதலிக்கிறான். ஒருநாள் மாயா தன்னைக் காதலிக்கவில்லை சாமைத்தான் காதலிக்கிறாள் என அறிந்து அவளைவிட்டு விலக முயல்கின்றபோது இரட்டைக்கோபுரம் தாக்கப்படுகின்றது. அந்ததாக்குதலின் பின்னர் ஓமர் பிலடெல்பியாவிற்க்கு இடம் மாறுகின்றான். அதன்பின்னர் அவனை 2008 அல்லது 2009 கால கட்டத்தில் கைது செய்யும் ரொஷான் அவனை குற்றமற்றவன் என நிரூபிக்க சாமுடன் சென்று இணைந்து எவ்பிஐக்கு உளவுவேலை செய்யுமாறு வற்புறுத்துகிறார். இதனைடையில் அவர் சாமுக்கும் மாயாவுக்கும் திருமணமாகிவிட்டது அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கின்றது, மாயாவின் வாழ்க்கையும் சாமின் வாழ்க்கையும் நல்லாயிருக்கவேண்டும் என்றால் ஓமர் கட்டாயம் சாமை கண்காணித்து அவனை தம்மிடம் ஒப்படைக்குமாறு மீண்டும் மீண்டும் வற்புறுத்த ஒரு கட்டத்தில் அந்த வேலையைச் செய்ய ஓமர் ஒப்புக்கொள்கிறான். சாம் ஏன் தீவிரவாதியானான், மாயாவுக்கும் சாமுக்கும் எப்படித் திருமணம் நடந்தது? ஓமர் நண்பனை மனம் மாற்றினானா? போன்ற கேள்விகளுக்கான விடைகளை படத்தைப் பார்த்து அறிந்துகொள்ளுங்கள். யாஷ் சோப்ராவின் தயாரிப்பில் சக்தே இந்தியாவிற்க்கு பிறகு வந்த நல்ல படம் என்று நியூயோர்கை கூறலாம். இடையில் ஒரு சில மொக்கைப்படங்கள் தயாரித்திருந்தார்.ஜோன் ஆப்ரகாம், நீல் நித்தின் முகேஷ், இர்பான் கான்(பார்ப்பதற்க்கு நம்ம எஸ் ஜே சூர்யா போல் இருக்கிறார்) கத்ரினா கைவ் ஆகியோர் நடிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆதித்யா சோப்ராவின் கதைக்கு திரைக்கதை வசனம் எழுதியிருப்பவர் சந்தீப் ஸ்ரீவத்சவா. இவரது கொஞ்சம் மெதுவான திரைக்கதையை இயக்கியிருக்கிறார் கபீர் கான். பல இடங்களில் அடுத்த காட்சி இதுதான் என ஊகிக்கவைக்கும் திரைக்கதை. இது கொஞ்சம் பலவீனமாக இருந்தாலும் தெளிவான திரைக்கதை என்பதால் ரசிக்கும்படி இருக்கின்றது. இடைச்செருகல் இல்லாமல் திரைப்படத்துடன் ஒன்றிவருகின்ற பாடல்கள் என்பதாலோ என்னவோ பாடல்கள் போரடிக்கவில்லை. அத்துடன் வழமையான ஹிந்திப்படங்கள் போல் பாடல்களும் இல்லை மொத்தம் இரண்டோ மூன்று பாடல்கள் தான் படத்தில் வருகின்றது. ஒரு டூயட் கூட இல்லை என்பது அதிசயம் தான். அத்துடன் அதைக்களம் அமெரிக்காவில் இருந்தாலும் எந்தக் கெட்டவார்த்தையும் இல்லாமல் எடுத்திருக்கிறார்கள். வேட்டையாடு விளையாடுவிலும் இதேபோல் கெளதம் மேனன் முயற்சி செய்திருக்கலாம். அஷீம் மிஸ்ராவின் ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி இருக்கின்றது. மிக அழகாக நியூயோர்க் நகரத்தை படம் பிடித்துக்காட்டியுள்ளார். 1999ஆம் ஆண்டுக்காட்சிகளில் பின்னணியில் இரட்டைகோபுரத்தை காட்டியிருக்கிறார்கள். சித்திரவதை முகாம்( Detention Camp )காட்சிகள் வேறு சில நினைவுகளையும் ஏற்படுத்துகின்றது. அத்துடன் தீவிரவாதிகள் எனக் காண்பிக்கும் அனைவரும் இஸ்லாமியர்களாக இருக்கும் அதேநேரத்தில் எவ்பிஐ அதிகாரியான இர்பான் கானும் ஒரு இஸ்லாமிய பாத்திரத்திலேயே நடித்திருக்கிறார். அமெரிக்கா போலீசின் மனிதாபிமானமற்ற போக்கை சில காட்சிகளில் சாடியிருக்கிறார் இயக்குனர். இறுதிக்காட்சியில் அமெரிக்கர்கள் தீவிரவாதி ஒருவனின் மகனை ஹீரோவாககொள்கிறார்கள் என்ற அமெரிக்கர்களின் பரந்த மனப்பான்மையையும் இயக்குனர் பதிவுசெய்யத் தவறவில்லை.தீவிரவாதி என்ற பெயர் ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படி மாற்றுகின்றது என்பதை காத்திரமாக சொல்லும் படம் தான் நியூயோர்க்.டிஸ்கி : இப்படியான படங்கள் ஏன் தமிழில் வருவதில்லை? அப்படி வந்தாலும் ஏன் ஓடுவதில்லை? என்ற கேள்விக்கு யாராவது பதில் தாருங்கள்.
எழுதியது வந்தியத்தேவன் at
document.write(tamilize('2:58 PM'))
மதியம் 2:58 9 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் சினிமா, நியூயோர்க், விமர்சனம், ஹிந்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment