உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடேமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்
Saturday, March 17, 2012
மத்திய அரசின் கிழிந்த சட்டையும்!
அதே போல அவர் கொண்டு வர முயன்ற பல நல்ல, கெட்ட பொருளாதார
சீர்திருத்த திட்டங்களும் முடங்கிக் கிடக்கின்றன. இதனால் பிரதமருக்குள் இருக்கும் சீர்திருத்தவாதி அவ்வப்போது வெளியே எட்டிப் பார்த்து அவரது தூக்கத்தைக் கெடுப்பதாகத் தெரிகிறது.குறிப்பாக பொதுத் துறை பங்குகளை விற்று பல லட்சம் கோடி திரட்டி அதை வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பங்கு விற்பனைக்கான இலக்கு கடந்த பல பட்ஜெட்களிலும் அறிவிக்கப்பட்டாலும், பங்குகளை நினைத்த அளவுக்கு விற்கவும் முடியவில்லை, நிதியைத் திரட்டவும் முடியவில்லை. காரணம்.. கூட்டணி பிளஸ் எதிர்க் கட்சிகள் கூட்டு எதிர்ப்பு, பொருளாதார மந்த நிலை
என பல காரணங்கள்.இந் நிலையில் சாகும் நேரத்தில் சங்கரா சங்கரா மாதிரி, இந்த நிதியாண்டு முடிந்து அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் போடப் போகும் நேரத்தில், மத்திய எண்ணெய் மற்றும் இயற்கை கழகமான ஓ.என்.ஜி.சியின் பங்குகளை விற்று ரூ. 12,400 கோடி திரட்ட மத்திய அரசு டிவுசெய்தது.இதன்மூலம் பட்ஜெட்டில் விழும் ஓட்டையை ஓரளவுக்கு அடைத்து, பற்றாக்குறையை சரி செய்யலாம் என மத்திய அரசு நினைத்திருந்தது.இதையடுத்து ஓஎன்ஜிசியின் 5 சதவீத பங்குகளை நிதி நிறுவனங்களுக்கு ஏல அடிப்படையில் விற்க நேற்று அதை பங்குச் சந்தையில் ரிலீஸ் செய்தது மத்திய அரசு. ஒரு பங்கின் விலை ரூ.290 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.ஆனால், பங்குச் சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்த காலை 9.15 மணிக்கே நிலைமை சரியில்லை என்பது மத்திய அரசுக்குத் தெரிந்துவிட்டது. மானியம் என்ற பெயரில் மத்திய அரசு டீசல், பெட்ரோல், மண்ணெண்ணைக்கு அள்ளிக் கொடுத்து வரும் பணத்தின் பாரத்தை தாங்கும் மத்திய அரசு நிறுவனங்களில் ஓஎன்ஜியும் ஒன்று. இப்படி 'பாரம் சுமக்கும்' ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க யார் முன் வருவார்கள்?. குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் (Foreign institutional
investors) அந்தப் பக்கம் திரும்பக் கூட இல்லை. இதனால், காலை முதலே ஓஎன்ஜிசி பங்குகள் விற்பனை படுத்தே கிடந்தன.மொத்தம் விற்பனைக்கு வந்த 1.44 கோடி பங்குகளில், 3.20 மணி வரை வெறும் 3.4 சதவீத பங்குகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன.
அதாவது, ரூ.12,400 கோடி திரட்டியிருக்க வேண்டிய மத்திய அரசுக்கு கிடைத்த பணம்
வெறும் ரூ. 400 கோடி தான்.இதனால் அதிர்ந்து போன நிதியமைச்சகம் கையைப்
பிசைய, பங்குச் சந்தையின் வர்த்தக நேரம் முடிவடைந்த பின்னரும் இந்த பங்கு விற்பனை குறித்த விவரத்தை பங்கு சந்தை வெளியிடாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தது. விற்பனையான பங்குளை சரி பார்த்துக் கொண்டிருப்பதாக பங்குச் சந்தை 'புருடா' விட்டுக் கொண்டு காலத்தை கடத்தியது.இதையடுத்து நிதியமைச்சகம், ஓஎன்ஜிசி அதிகாரிகள், மத்திய அமைச்சர்கள் என பலரும் கூடி அவசரமாக விவாதித்தனர். 3.30 மணிக்கு பங்குகள் ஏலம் முடிவடைந்த பின்னரும் சுமார் 4 மணி நேரம் இந்த ஆலோசனைகள் நடந்தன.பங்குகள் விற்காமல் போய்விட்டால் நமது முகத்தில் மண் ஒட்டிவிடும் என்பதால், அதைத் தவிர்க்க மத்திய அரசு இந்த விவகாரத்தில் ஒரு புதிய தீர்வைக் கண்டது.அதாவது விற்காமல் போய் மிச்சமிருக்கும் ஓன்ஜிசி பங்குகள் அனைத்தையும் எல்ஐசி நிறுவனத்தின் தலையிலும் சில மத்திய அரசு வங்கிகளின் தலையிலும்
கட்டுவது என்ற முடிவுக்கு வந்தனர்.கிட்டத்தட்ட 5 மணி நேரத்துக்குப்
பின்னர், அதாவது இரவு 9 மணிக்கு, எல்லா பங்குகளும் ற்கப்பட்டுவிட்டதாகவும் ரூ. 12,000 கோடி திரப்பட்டுவிட்டதாகவும் ஒரு அறிவிப்பை நிதியமைச்சக அதிகாரிகள் வெளியிட்டனர். ஆனால், ஓஎன்ஜிசி இது குறித்து வாயே திறக்கவில்லை. அதன் முதலீட்டுப் பிரிவு அதிகாரிகள் எல்லோரும் கிட்டத்தட்ட ஓடி ஒளிந்து கொண்டனர்.இதைவிட இன்னொரு சிரிப்பு வரவழைக்கும் காரணத்தை பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனைக்கான (சரியாக சொன்னால் 'பங்கு விலக்கல் துறை'.. இப்படி ஒரு துறை உலகத்தில் வேறு எங்கும்
உண்டா என்று தெரியவில்லை.. இது உருவானது பாஜக ஆட்சியில், அதற்கு 'இன்ஸ்பிரேஷனாக' இருந்தது மன்மோகன்ஜி தான்) கூடுதல் செயலாளர் சித்தார்த் பிரதான் கூறினார். பல பங்குகள் விற்பனையாகியிருந்தாலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது சரியாக
பதிவாகவில்லை. இது குறித்து விசாரிக்க சொல்லியிருக்கிறோம் என்றார்
பிரதான்.ஆனால், அப்படி எந்த தொழில்நுட்பக் கோளாறும் ஏற்படவில்லை என்றனர்
மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையின் அதிகாரிகள்.கிட்டத்தட்ட
ரூ. 8,500 கோடி மதிப்புள்ள ஓஎன்ஜியின் பங்குகளை எல்ஐசி மற்றும் பொதுத் துறை வங்கிகளை கட்டாயப்படுத்தி வாங்க வைத்து தனது முகத்தில் மண் ஒட்டினாலும் மீசையில் இருந்த மண்ணை தட்டிவிட்டுள்ளது மத்திய அரசு. இதில் சுமார் ரூ. 4,000 கோடி மதிப்புள்ள பங்குகளை எல்ஐசி வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஸ்டேட் பேங்க் தலையிலும் கொஞ்சம் பங்குகள் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.ஆனால், இதற்குப் பெயர்
உண்மையிலேயே பங்கு விற்பனையா என்றால் சின்னக் குழந்தை கூட சிரிக்கும். மத்திய அரசின் ஒரு நிறுவனத்தின் பங்குகளை அதே மத்திய அரசின் பிற நிறுவனங்கள் வாங்குவது என்பது, நமது இடப் பக்க பாக்கெட்டில் உள்ள காசை, வலது புற பாக்கெட்டில் மாற்றி வைப்பது மாதிரி தான். இதில் நமக்கு என்ன கூடுதலாகக் கிடைத்துவிடப் போகிறது?.ஆனால், இங்கு ஓஎன்ஜிசியின் பாக்கெட்டை பாதுகாக்க எல்ஐசி மற்றும் பொதுத் துறை வங்கிகளின் பாக்கெட்டை மத்திய அரசு கிழித்துவிட்டது என்பது தான் உண்மை.நிலைமை இப்படியே போனால், விரைவில் மத்திய அரசின் கதர் சட்டையே கிழிந்தாலும் ஆச்சரியப்படாதீர்கள்
EntriesThe CBS-affiliate from Eugene
Sunday, July 12, 2009
Friday, July 10, 2009
பெரிய பெரிய காலேஜுல கூட கேம்பஸே வரலையாமே?
இந்த வருஷம் பெரிய பெரிய காலேஜுல கூட கேம்பஸே வரலையாமே? என்று நண்பர் ஒருவர் கேட்டார்.ஆம். முற்றுப்புள்ளி.ஏன் வரலை? எதுக்கு வரலை என்பதை பற்றியதல்ல இந்த இடுகை. அது உங்களுக்கே தெரியும். பொருளாதார மந்த சூழ்நிலை... ப்ளா. ப்ளா.ப்ரெஷ்ஷாக படிப்பை முடித்துவிட்டு வந்தவர்களுக்கு இருக்கும் ஆப்ஷன்கள் என்ன?ஆப்ஷன் A: ஒரு இன்ஸ்ட்டியூட்டில் சேர்ந்து கல்லூரியில் ஒழுங்காக படிக்காமல் போன ஜாவா, சி, எஸ்.க்யூ.எல் ஆகியவற்றை உண்மையாக படிப்பது.இதில் Pros and Cons-நல்லது and கெட்டது1.ஒழுங்கான இன்ஸ்டிடியூட்டில் சேரவில்லை என்றால் காசு வேஸ்ட்.2.முழு உள்ளத்தோடு, புரிந்து படிக்கவில்லை என்றாலும் காசு வேஸ்ட்.3.வீட்டில் பைக்குக்கு தொடர்ந்து பெட்ரோல் காசு வாங்கவும், உங்கள் 'பிகர்' சேர்ந்துள்ள இன்ஸ்டிடியூட்டில் சேரவும் இந்த ஆப்ஷனை தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் டோட்டல் வேஸ்ட்.கொஞ்சம் பணம் செலவாகும். இருந்தாலும், முறையாக பயன்படுத்தப்பட்டால் ஆப்ஷன் A, மார்க்கெட் சிரடையும்போதோ அல்லது அதற்கு முன்னாலோ உங்களுக்கு ஒரு நல்ல வேலையை வாங்கித்தர வாய்ப்புண்டு.ஆப்ஷன் B: வேலை தேடி சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களுக்கு பொட்டியை கட்டுவது.இதில் Pros and Cons - நல்லது and கெட்டது1. மீண்டும் பெற்றோர் தொந்தரவு இல்லாமல் தம், தண்ணி, ஷோக்கு என்று ஜாலியாக இருக்கலாம். மாதம் மாதம் ஊரு பக்கம் வந்து மூன்றாயிரம் நான்காயிரம் என்று வாங்கி செல்லலாம்.2. பெங்களூர் சென்னை என்று ஊர் சுத்தி, ஐனாஸ், ஐமாக்ஸ், சத்யம், பிவிஆர் என்று நல்ல சினிமாக்களை தொடர்ந்து பார்க்கலாம்.3. நல்ல கம்பெனியில் வேலைபார்க்கும் சீனியர்களை தொடர்புகொண்டு, அவர்கள் உதவியோடு ரெஸ்யூம் தயாரித்து, அவர்களுடைய அட்வைஸ்படி கூகிள் அண்ட்ராய்ட், உபுண்டு லினக்ஸ் என்று லேட்டஸ்ட் டெக்னாலஜி படிக்கலாம்.சில சமயம் கஷ்டமாக இருந்தாலும், நன்றாக பயன்படுத்தப்பட்டால், நல்ல உலக அனுபவம் கிடைக்கும். சில சமயம் உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும். பெரும்பாலும் சூப்பராக. சிறும்பாலும் சுமாராக.ஆப்ஷன் C: வீட்டிலேயே வெட்டியாக பொழுதை கழிப்பது.இதில் Pros and Cons - நல்லது and கெட்டது1. வீட்டில் இருந்தபடி அண்ட்ராய்ட், ஜே2எம்இ, லைனக்ஸ் என்று கணினியில் பழகலாம், இணையத்தில் லேட்டஸ்ட் டெக்னாலஜியை பிரித்து மேயலாம். ரெஸ்யூம் தயாரித்து, இளம் பொறியாளர்களை அழைக்கும் கம்பெனிகளை தொடர்ந்து தொடர்பு கொண்டு பணி வாய்ப்பை பிடிக்கலாம்.2. இண்டர்நெட் இணைப்புக்கான செலவை டாடி தலையில் கட்டி, நான்கு வருடம் கஷ்டப்பட்டு படித்த களைப்பை போக்க, ஆர்க்குட் மேய்ந்து, இட்லிப்பொடி வைத்து தோசை சாப்பிட்டு, சந்தோஷமாக மதிய உறக்கம் போடலாம்.3.பக்கத்து வீட்டு ஜன்னலை வளர்ந்துவிட்ட கண்ணோடு ரூட் விட்டு, கே.டிவியில் இதுவரை பார்க்காத 'மொக்கை படம்' எல்லாம் பார்த்து, கம்பூட்டர் கேம்ஸ் ஆடி, தம்பியிடம் வம்படித்து, அப்பாவிடம் அவ்வப்போது திட்டு வாங்கி, அம்மாவிடம் சண்டையிட்டுக் கொண்டு, குஜாலாகவே இருக்கலாம்.கொஞ்சமும் கஷ்டமில்லாத ஈஸியான இந்த ஆப்ஷன் C, பெரிதாக பண செலவு எதுவும் வைக்காது. அதிஷ்டம் இருந்தால் ஒரு நல்ல வேலை கூட கிடைக்க வாய்ப்பு உண்டு. இருந்தாலும் நீங்கள் ஒரு மகா 'மொக்கையான' மனிதராக, வெத்துவேட்டாக உருவாக வாய்ப்புண்டு.ஆப்ஷன் D: கிடைத்த வேலையை செய்வதுஇதில் Pros and Cons - நல்லது and கெட்டது1. மார்க்கெட்டிங்கோ, ஹார்ட்வேர் எஞ்சினீயர் வேலையோ, அல்லது தினத்தந்தி வரி விளம்பரத்தில் வரும் டி.டி.பி ஆப்பரேட்டர், ஐந்தாயிரம் சம்பளம் பணியையோ செய்யலாம்.2. உங்களுக்கு விரும்பம் இல்லாத சில நேரங்களில் கூட கடுமையான வெய்யிலில் அலையும் வாய்ப்பு உள்ள ஆப்ஷன் இது. வயிற்றுக்கு வேளா வேளைக்கு சோறு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. சில சமயம் குறிப்பிட்ட நாளைக்குள் சம்பளம் கிடைக்கும் வாய்ப்பு இல்லை, அல்லது சம்பளமே கிடைக்கும் வாய்ப்பு இல்லை.3.இந்த வேலையை செய்து கொண்டிருக்கும்போது லேட்டஸ்ட் டெக்னாலஜியை அப்டேட் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் உங்களுக்கு உண்டு. ஆகவே நீங்கள் இரட்டிப்பு மடங்கு உழைப்பை சிந்த வேண்டியது இருக்கும்...அப்போது தான் மார்க்கெட் சீரடையும்போது உங்கள் மனதுக்கு பிடித்த விருப்ப பணியை தேர்ந்தெடுத்து செல்ல முடியும்.கொஞ்சம் கடினமான ஆப்ஷன் இது, இருந்தாலும், சிறப்பாக பயன்படுத்தப்பட்டால், உலக அனுபவம், உள்ளூர் அனுபவம், லேட்டஸ்ட் ட்ரெண்ட்ஸ், வாழ்க்கையின் நெளிவு சுளிவுகள், பேச்சுத்திறமை என்று எல்லாம் கிடைத்து புடம் போட்ட தங்கத்தில் பொதிந்த வைரமாக நீங்கள் மாற வாய்ப்பு உண்டு.ஆப்ஷன் E: ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளை நடத்தும் மத்திய அரசுத் தேர்வுகளுக்கோ அல்லது NET போன்ற 'ப்ரொபஸர்' வேலைக்கு போற தேர்வுகளுக்கோ அல்லது IELTS போன்ற வெளிநாட்டு படிப்புக்கான ஆங்கில தேர்வுகளுக்கோ தயார் செய்வது.இதில் Pros and Cons - நல்லது and கெட்டது1.தினமும் பத்து மணி நேரம் பதினாறு மணி நேரம் படித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியான தமிழர்களை பற்றிய செய்திகளை படித்திருக்கிறேன். கடினமாக உழைத்தால் மட்டுமே உங்களால் இதில் ஜெயிக்க முடியும்.2. NET எக்ஸாம் எழுதலாம். Phd படிக்கலாம். உங்களுக்கு ஆசிரியப் பணி பிடிக்கும் என்றால் களத்தில் இறங்கினால் வெற்றி நிச்சயம்.3. வெளிநாட்டில் படித்தால் வேலை கிடைக்கும், ஜெயித்துவிடலாம் என்பது சுத்த ஹம்பக். 100ல் பத்து பேரே சிறப்பான, படிப்புக்கு தகுந்த வேலையை வெளிநாட்டில் படித்து முடித்து அதன் பின் செய்கிறார்கள்.இந்த ஆப்ஷனை நிறைய பேர் எடுத்தால் தமிழ்நாட்டில் இருந்து அற்புதமான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் உருவாக வாய்ப்புண்டு.இளைய தலைமுறை ப்ரொபஸர்கள், இந்த தலைமுறையை புரிந்துகொண்ட ஆசிரியர்களும் நமக்கு கிடைப்பார்கள்.வங்கிக் கடன் பல லட்சத்துடன் வெளிநாட்டில் பிஸ்ஸா தட்டியோ, அல்லது ப்ளேட் கழுவியோ கஷ்டப்பட்டு, அதன் பிறகு நல்ல வேலையுடன் அங்கேயே செட்டில் ஆகவோ, அல்லது இந்தியா திரும்பவோ வாய்ப்புண்டு.கடைசியாக, உழைப்பும் தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் மட்டுமே உங்களை கரை சேர்க்கும். வெற்றியாளராக உருவாக்கும். சாதனையாளராக மெருகேற்றும். அல்லது அட்லீஸ்ட் உங்கள் சொந்த காலில் உங்களை நிற்க வைக்கும்.ஒரு அரியருடன் கம்யூட்டர் சைன்ஸ் முடித்து வெளியே வந்த எனக்கு இரண்டு நூறு ரூபாய்கள் என்னுடைய முதல் சம்பளம். ஒரு ப்ரிண்டிங் ப்ரஸ்ஸில். இன்றைக்கு என்னுடைய சொந்த காலில் நிற்கிறேன்...இங்கே அதிகம் எழுதினால் தற்பெருமையாகிவிடும்.. அவ்வளவுதான் சொல்ல முடியும்.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு...நல்ல பிள்ளைகளுக்கு ஒரு கட்டுரை..!!
Thursday, July 9, 2009
பங்குச் சந்தையில் பட்ஜெட் எஃபெக்ட்.
ஆனால் சர்வதேச பொருளாதாரச் சூழல், இந்திய அரைகுறை பொருளாதார அறிவுஜீவிகளின் கணிப்புக்கேற்ப இல்லை. அரசுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கினால், இந்தியாவின் நிலைமையும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பொருளாதார நச்சுச் சுழலுக்குள் சிக்குவதைத் தவிர வேறு வழியே இல்லை. இந்த உண்மை தாமதமாக உறைத்ததால், பல முதலாளித்துவ நாடுகள் தொழில் துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முயன்று வருகின்றன.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இதுவரை விலை நிர்ணயத்தை சந்தை சக்திகளே நிர்ணயித்துக் கொள்ளும் முறை இருந்தது. ஆனால் இப்போது விலைகளை கட்டுப்படுத்த புதிய மெக்கானிசத்தை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
ஆனால் இந்தியாவிலோ, தனியார் துறையினரை வளர்த்தெடுக்க, அரசு நிறுவனங்களைப் பலிகொடுக்கும் போக்கு தொடர்கிறது.
இந்த நிலையற்ற போக்கினால் பங்குச் சந்தையிலும் பொருளாதாரத்திலும் நிலையற்ற போக்கு தொடர்கிறது.
கடந்த மூன்று தினங்களாக இந்தியப் பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்த பங்குச் சந்தை சென்செக்ஸ் நேர முடிவில் 400 புள்ளிகளை இழந்தது.
நிப்டியில் 123 புள்ளிகள் வீழந்தன. சுஸ்லான், டிஎல்எப், டாடா ஸ்டீல் போன்ற நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தன. ஏசிசி, பிபிசிஎல், மாருதி போன்ற நிறுவனப் பங்குகள் மட்டும் சுமாரான லாபத்தில் கைமாறின.
சென்செக்ஸ் 13769 புள்ளியிலும், நிப்டி 4078 புள்ளியிலும் நிறைவு பெற்றது.
Wednesday, July 8, 2009
நானோ காரும் அப்பட்டமான கொள்ளையும், வாய் பிளந்த ஏமந்த மக்களும்
டாடாவின் கனவை நனவாக்குவதற்கு மேற்கு வங்கத்தின் டாடா கம்யூனிஸ்டுகள் ஓடோடி வந்தார்கள். சிங்கூரில் இருபோகம் விளையக்கூடிய விவசாய நிலங்கள் சுமார் 950 ஏக்கர் நிலங்களை விவசாயிகளிடமிருந்து வம்படியாக பிடுங்கி பேருக்கு நிவாரணத்தொகை கொடுத்துவிட்டு மலிவு விலைக்கு டாடவுக்கு விற்றார்கள். இதுபோக டாடாவுக்கு சில ஆயிரம் கோடி கடன், மற்ற சலுகைகள் என தீபாராதனை திவ்யமாக நடந்தது. என்ன ஏது என தெரியாமல் தமது நிலங்களை மார்க்சிஸ்டு அரசு பிடுங்கியதைக் கண்ட தமது பங்காளி புத்ததேவுடன் இணைந்து ஆலையை நிறுவினார். இடையில் நந்திகிராமில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை அடாவடியாக நிறுவிய மேற்கு வங்க அரசைக் கண்டித்து விவசாயிகள் போர்க்குணத்துடன் போராட, மார்க்சிஸ்டு அரசு போலீசு மூலம் பலரைச்சுட்டுக் கொன்றது. இதன் மூலம் சிங்கூருக்கும் இதுதான் பாடமென்று எச்சரிக்கையும் விடுத்தது.
ஆனால் சிங்கூர் விவசாயிகள், எதிர்க்கட்சிகள் உதவியுடன் எதிர்ப்பைத் தீவிரப்படுத்தி தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராடினார்கள். பலநாள் நீடித்த இந்தப் போராட்டத்தைப் பார்த்து டாடாவுக்கு பெருங்கோபம் வந்தது. உடனே தொழிற்சாலையை வேறு மாநிலத்திற்கு மாற்றுவதாகவும் அறிவிக்கப்பட்ட தேதியில் நானோ கார் வெளிவரும் எனவும் சபதம் செய்தார். அதுவரை உத்தரகண்டில் இருக்கும் டாடா மோட்டார் தொழிற்சாலையில் தற்காலிகமாக நானோ கார் தயாரிக்கப்படும் எனவும் அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலிக் கம்யூனிஸ்டு அரசு ரத்தன் டாடாவிடம் மண்டியிட்டு போகாதே என் கணவா என்று சென்டிமெண்டாகவும் புலம்பிப் பார்த்தது.
ரத்தன் டாடவுக்கும், புத்ததேவ் பட்டாசார்யாவுக்கும் எந்த அளவு தோழமை உறவு இருந்ததோ அதற்கு கடுகளவும் குறையாமல் டாடாவுக்கு மோடியுடனும் நட்பிருந்தது. மேற்கு வங்கம் கைவிட்டால் என்ன குஜராத் காத்திருக்கிறது என்று மோடி கம்பளம் விரித்தார். இமைப்பொழுதில் டாடா என்ற முதலாளிக்கும், மோடி எனும் பாசிஸ்டுக்கும் பேச்சுவார்த்தை நடந்து சடுதியில் ஒப்பந்தம் போடப்பட்டது. இனிமேல்தான் இலட்ச ரூபாய்க்கு விற்கப்படும் நானோ கார் மக்களுக்கு பட்டை நாமம் போட்ட கதை வருகிறது. நானோ காரின் மலிவு விலைக்கும், அதை சாத்தியமாக்கிய டாடாவின் அளப்பரிய ‘சமூக’ சேவைக்கும் மயங்கிப்போன நடுத்தர வர்க்கம் தங்களிடமிருந்து பிடுங்கப்ட்ட பணம் டாடாவின் மலிவு விலை காருக்கு எப்படி போய்ச் சேருகிறது என்பதை தெரிந்து கொள்ளட்டும்.
10.8.2008 அன்று குஜராத் அரசுக்கும் டாடா நிறுவனத்திற்கும் போடப்பட்ட இந்த இரகசிய ஒப்பந்தம் யார் யாருக்கு சேவை செய்கிறார்கள் என்பதை போட்டுடைக்கிறது.
குஜராத்தின் சதானந்த் இடத்தில் அமைய இருக்கும் டாடாவின் நானோ தொழிற்சாலைக்கு 1100 ஏக்கர் விவசாய நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. விவசாய நிலங்களை விவசாயமற்ற நடவடிக்கைகளுக்கு விற்கக்கூடாது என்ற விதி மீறப்பட்டு அதுவும் மலிவான விலையில் 400 கோடி ரூபாய்க்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணமும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு எட்டு தவணைகளில் டாடா நிறுவனம் கட்டினால் போதும். விவசாய நிலங்களை இப்படி தொழிற்சாலைக்கு கொடுக்கும் பட்சத்தில் அதற்கென தனியாக பணம் கட்ட வேண்டுமென்ற விதியும் டாடவுக்காக ரத்து செய்யப் பட்டது.
2000 முசூலீம் மக்களை கொன்ற கும்பலுக்கு தலைமை தாங்கியிருக்கும் மோடிக்கு அப்பாவி விவசாயிகளை மிரட்டத் தெரியாதா என்ன? மேலும் மேற்கு வங்கம் போல அரசியல் ரீதியாக அணி திரள இயலாத அந்த அப்பாவிகள் தமது நிலத்தை கொடுத்துவிட்டு இன்றும் புழுங்குகின்றனர். அடுத்து இந்த நில விற்பனைக்கான பத்திரப்பதிவுக்கான 20 கோடி ரூபாயை மாநில அரசு ரத்து செய்து இலவசமாக பதிவு செய்து கொடுத்திருக்கிறது.
டாடா நிறுவனம் தொழிற்சாலையை அமைப்பதற்கு 9570 கோடி ரூபாயை குஜராத் அரசு 0.1% வட்டிக்கு கொடுத்திருக்கிறது. இதில் சிங்கூரிலிருந்து, சதானந்த் பகுதிக்கு தொழிற்சாலையை மாற்றுவதற்கான செலவுப் பணம் 2330 கோடிரூபாயும் அடக்கம். இந்த 9570 கோடிப் பணம் இருபது வருடங்களுக்குப் பிறகு டாடா நிறுவனம் அதுவும் பல தவணைகளில் திருப்புமாம். தொழிற்சாலை அமைய இருக்கும் இடத்தில் தரமான சாலை, 14,000 கனமீட்டர் நீர், மின்வசதி இன்னபிற அடிப்படைக் கட்டுமான வசதிகளை 700 கோடி ரூபாயில் குஜராத் அரசே செய்து கொடுக்கும். மின் தீர்வை கட்டுவதற்கும் டாடாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு டாடாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு குஜராத் அரசு செலவு செய்யப்போகும் அல்லது இழக்கப்போகும் பணத்தின் மதிப்பு 30,000 கோடி ரூபாய்.
ஆக ஊரைக் கொள்ளையடித்து ஆடம்பரத் திருமணத்தில் கிடா வெட்டி மக்களுக்கு இலவச விருந்து அளிக்கும் கதைதான் இங்கும் நடந்திருக்கிறது. இவ்வளவு சலுகைகள், கடன் தொகை, இலவசமான அடிப்படை வசதிகள் எல்லாம் இருந்தால் நானோ காரை ஒரு இலட்ச்திற்குப்பதில் இலவசமாகவே அளிக்கலாமே? ஆம் நானோ காருக்கு நாம் கொடுக்கும் ஒரு இலட்சத்திற்கும் பின்னால் நமது பணம் இரண்டு இலட்சம் ஏற்கனவே பிடுங்கப்பட்டிருக்கிறது.
இன்னும் எட்டு மாதங்களில் உற்பத்தியை ஆரம்பிக்கப் போகும் தொழிற்சாலையில் முதலில் ஆண்டுக்கு 2.50 இலட்சம் கார்களும், பின்னர் அது 5 இலட்சமாக உயர்த்தி உற்பத்தி செய்யப்படுமாம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் திட்டமும் உண்டு.
நானோவின் பின்னே இப்படி அப்பட்டமான கொள்ளையும், சுரண்டலும் இருப்பதுதான் அதன் மலிவு விலைக்கு காரணம். பொதுத் துறைகளை தனியார் முதலாளிகளுக்காக நசிய விட்டு பின்னர் தவிட்டு ரேட்டில் விற்பனை செய்யும் நாட்டில் ஒரு முதலாளிக்கு முப்பதாயிரம் கோடி இனாமென்றால் இந்த நாட்டை ஆள்வது யார்? தரகு முதலாளிகளா, இல்லை ‘ மக்களால்’ தேர்ந்தெடுக்கப்பட்ட அரசா?
தனது விளம்பரத்தில் பல வசதிகள் இருப்பதாக புனைந்துரைக்கும் டாடாவின் நானோ கார் crash test எனப்படும் விபத்து சோதனையை மட்டும் செய்து சான்றிதழ் வாங்கவில்லையாம். இதன் பல உறுப்புக்கள், இணைப்புக் கருவிகள் மலிவான பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டிருப்பதால் டாடா இந்த சோதனைக்கு தயாராக இல்லை. அதாவது இந்தக் காரை ஒரு டூ வீலர் கூட மோதி பொடிப்படியாக நொறுக்கி விடலாம். நடுத்தர வர்க்கம் சுலபமான வழியில் பரலோகம் செல்லும் வசதியை நானோ ஏற்படுத்தித் தருகிறது.
உலகமெங்கும் பொருளாதார வீழ்ச்சிக்காக ஆட்டோமொபைல் தொழில் நசிந்து வரும வேளையில் டாடவின் நானோ கார் அறிமுகம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். மேலும் இந்தக் காரை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் டாடவிற்கு இருக்கிறதாம். 2011 ஆம் ஆண்டு விபத்து சோதனை உட்பட எல்லா சோதனைகளிலும் வென்று ஐரோப்பாவின் மலிவான கார் என நானோ விற்கப்பட இருக்கிறதாம். வெள்ளைக்காரனது உயிருக்கு மட்டும் அவ்வளவு எச்சரிக்கைகள்! அதை பரிசோதிப்பற்கு இந்தியனின் உயிர்! பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் தங்களது சோதனைகளுக்கு இந்திய மக்களை எலிகளைப் போலப் பயன்படுத்துவது போல டாடவும செய்கிறது.
இந்தியாவின் பொதுப்போக்குவரத்திற்கு பயன்படும் வாகனங்கள் மொத்த வாகனங்களில் ஐந்து சதவீதமென்றால் இதைப் பயன்படுத்தும் மக்களின் சதவீதம் 70. ஆனால் மொத்த வாகனங்களில் 70 சதவீதததைப் பிடித்திருக்கும் தனியார் வாகனங்கள் அல்லது கார்கள் மக்களில் 5 சதவீதம் பேருக்குத்தான் பயன்படுகிறது. எனில் நானோவால் ஏமாறப்போவது பெரும்பான்மை மக்கள்தான்.
ஒரு இலட்ச ரூபாய்க்கு காரா என வாய் பிளப்பவர்களின் மூளைக்கு இந்த விளம்பரத்தையும் , கட்டுரையையும கொண்டு செல்லுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
செத்தபின்னும் திருடுவார், திருட்டுபாய் அம்பானி
90களில் பயங்கரவாதத்தினால் பரிதாபமாக்கப்பட்ட காதலர்களைப் படமாக்கிய மணிரத்தினம் 2000ஆம் ஆண்டுகளில் பொருளாதாரத்தை முன்னேற்றிய முதலாளித்துவ நாயகர்களை நாடிச் சென்றிருக்கிறார். காலத்திற்கேற்ற மாற்றம்தான். 2020இல் இந்தியா வல்லரசாகுமெனப் பிதற்றித்திரியும் அரசவைக் கோமாளி அப்துல் கலாம் இளைஞர்களிடம் விற்கப்படும் காலத்தில், இன்போசிஸ் நாராயணமூர்த்தியும், விப்ரோவின் பிரேம்ஜியும் பொன்முட்டையிடும் வாத்துக்கள் எனப் போற்றப்படும் நேரத்தில் இவர்களுக்கு முன்னோடியான அம்பானியை வெள்ளித்திரையில் நினைவு கூர்கிறார் மணிரத்தினம்.
எனினும் குரு திரைப்படத்தில் அவரது வழக்கமான காதல் சங்கதிகள் இல்லை. பணம் சம்பாதித்து முன்னேறவேண்டும் என்று போதிப்பதற்கு காதல் முதலான சென்டிமென்ட் பீடிகைகள் தேவையில்லையே?
இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாட்டில் நீங்கள் மட்டும் முன்னேறலாம் என்று தூண்டில் போடும் சுயமுன்னேற்ற வெறியைக் கலைக்கு கைமாற்றித் தந்திருக்கிறார் மணிரத்தினம். ஆனாலும் சமூகத்தில் கோலோச்சும் இந்த உணர்ச்சி கலையில் வெற்றி பெறவில்லை.
ஒரு வண்டிச்சக்கரத்தில் காலம் சுழன்று விஜயகாந்தோ, ரஜினிகாந்தோ மாபெரும் முதலாளிகளாவதை இரசித்துச் சலித்திருக்கும் இரசிகர்கள் அதையே இராஜீவ் மேனனின் லிரில் சோப் ஒளிப்பதிவிலும், ரஹ்மானின் கீ போர்டு அலறல் இசையிலும், மென்று முழுங்கும் மணிரத்தினத்தின் வசனத்திலும் லயிப்பதற்குத் தயாரில்லை. படத்தைப் பலரும் பார்த்திருக்க மாட்டீர்கள் என்பதாலும், பார்க்க வேண்டாம் என்பதாலும் கதையைச் சுருக்கமாகத் தருகிறோம்.
குஜராத்தின் கிராமமொன்றில் பள்ளிக்கூட ஆசிரியரின் மகன் குரு (நிஜத்தில் அம்பானி), தந்தையின் விருப்பத்தை மீறி துருக்கி (ஏடன்) நாட்டிற்குச் செல்கிறான். பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்தில் சாதாரணப் பணியாளாய் வேலை செய்கிறான். ஓய்வு நேரத்தில் மல்லிகா ஷெராவத்தின் முக்கால் நிர்வாண நடனத்தை இரசிக்கிறான். கூடவே மூன்று சீட்டு விளையாட்டில் விடாமல் வெல்கிறான். காரணத்தைக் கேட்டால் கவனம் என்கிறான். அடுத்து சூபர்வைசர் பதவிக்கு உயருகிறான். அவனுக்கு டை கூடக் கட்டத் தெரியவில்லை என்று சுட்டிக் காட்டும் வெள்ளையனது பதவி உயர்வுக் கடிதத்தைக் கடாசிவிட்டு இனிமேல் வெள்ளைக்காரனுக்கு உழைப்பதில்லை எனவும் சொந்தமாகத் தொழில் தொடங்கி வெற்றி பெறுவேன் .
வியாபாரத்தில் தோற்றுப் போவாய் என்று எச்சரிக்கும் தந்தையின் சாபத்தைப் புன்னகையால் மறுக்கிறான். வியாபாரத்துக்குத் தேவையான 15000 ரூபாயை வரதட்சிணையாக வாங்குவதற்காக, தன்னைவிட ஒரு வயது அதிகமென்ற போதிலும் நண்பனின் அக்காவை (கோகிலா பென்) திருமணம் செய்து கொள்கிறான். மச்சான் மற்றும் மனைவியுடன் வியாபாரம் செய்ய நெரிசல் மிகுந்த பம்பாய்க்கு இடம் பெயர்கிறான்.
நூல் மார்க்கெட் தரகனாக வணிகம் செய்யத் தொடங்கி மின்னல் வேகத்தில் வளருகிறான். ஜவுளி வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் கான்ட்ராக்டர் (பாம்பே டையிங்கின் நுஸ்லி வாடியா) எனும் முதலாளியின் தடைகளை மீறி தனது சக்தி (ரிலையன்ஸ்) நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துகிறான். இலட்சிய வேட்கை கொண்ட இந்த கிராமத்து இளைஞன் மீது காந்தியவாதியான ஒரு பத்திரிகை அதிபருக்கு (இந்தியன் எக்ஸ்பிரஸ் இராம்நாத் கோயங்கா) அனுதாபம் ஏற்படுகிறது. அதன் பிறகு அவனது தொழில் பிரம்மாண்டமாக வளருகிறது. ஜவுளி தொழிற்சாலை, பாலியஸ்டர் ஆலை, பங்குகள் வெளியீடு, மைதானத்தில் பங்குதாரர் கூட்டம் என்று உச்சத்திற்குப் போகிறான். இடையிடையே மணிரத்தினத்தின் திருப்திக்காக மனைவியைக் கொஞ்சி நடனம் ஆடுகிறான்.
இவனது அசுர வளர்ச்சி குறித்து பத்திரிகை அதிபருக்குச் சந்தேகம் வருகிறது. அவனது முறைகேடுகளை அம்பலப்படுத்தி நிர்வாணப்படுத்தப் போவதாக அவர் எச்சரிக்கிறார். “என்னை நிர்வாணப்படுத்துவதற்கு எல்லோரையும் நிர்வாணப்படுத்த வேண்டும்” என்று பதிலளிக்கிறான் குரு. பத்திரிக்கை அதிபரின் நிருபர் (அருண்ஷோரி) குருவின் வணிக மோசடிகளை அம்பலப்படுத்துகிறார். குருவோ எல்லா பத்திரிக்கைகளுக்கும் விளம்பரத்தைக் கொடுத்து வாயடைக்க முயல்கிறான். இருப்பினும் இதனால் அவனுக்கு தொழிலில் நெருக்கடி ஏற்படுகிறது. அத்துடன் பக்கவாதத்தில் வேறு விழுகிறான். பத்திரிக்கை அதிபர் வருத்தப்படுகிறார். இறுதியில் அரசாங்கம் சக்தி நிறுவனத்தின் மோசடிகளை ஆராய விசாரணைக் கமிஷன் அமைக்கிறது.
“எதுவும் தெரியாத கிராமத்து இளைஞன் தொழில் துவங்க நினைத்தது தவறா, தன்னை முடக்க நினைத்த பரம்பரை முதலாளிகளை வென்று காட்டியது குற்றமா, பல இலட்சம் பங்குதாரர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வண்ணம் தனது தொழில் சாம்ராச்சியத்தைக் கட்டியமைத்தது முறைகேடா” என்று நீதி விசாரணையில் இறுதிக் காட்சியில் விஜயகாந்த் ஸ்டைலில் பொரிந்து தள்ளுகிறான். இவன் தொழிற்துறையின் தாதாவா அல்லது அறிவுஜீவியா என்று வியக்க வைத்தான் .
அம்பானியின் வாழ்க்கையை அட்சரம் பிசகாமல் எடுத்திருக்கும் மணிரத்தினம் இந்தப் படத்தின் மூலம் கூறுவது என்ன? வணிகம் செய்து முன்னேற வேண்டும் என்பதை இரத்தத்தில் வரித்திருக்கும் ஒரு கிராமத்து இளைஞன் ஒரு இலட்சியவாதியைப் போலப் போராடுகிறான். அந்த இலட்சியமே வாழ்க்கை குறித்த அவனது அணுகுமுறை அனைத்தையும் நியாயப்படுத்துகிறது. தடையரண்களாய் வரும் அரசு, சட்டம், ஏனைய முதலாளிகள், அதிகாரவர்க்கம் முதலானவற்றை அவன் தகர்த்துச் செல்கிறான். தொழிற்துறையில் அவன் செய்யும் முறைகேடுகளைக் கூட இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் மணிரத்தினம்.
குருவை அம்பலப்படுத்தும் பத்திரிக்கை அதிபரும், நிருபரும் ஏதோ பகவத்கீதையின் கர்மவீரர்களைப் போலத்தான் செயல்படுகிறார்கள். குருவுக்கு எதிரான அவர்களது அறப்போராட்டம் மக்கள் நலன் குறித்த அக்கறையிலிருந்து எழவில்லை. பக்கவாதம் வந்து விழுந்தவுடனே குருவின் மீது அவர்கள் பரிதாபம் கொள்கிறார்கள். “நீ மட்டும் எப்படி ஒரு பெரிய முதலாளியானாய்” என்பது மட்டுமே அவர்களது கேள்வி. இந்தக் கேள்விக்கான விடைதான் இந்தியத் தொழிற்துறையின் முன்னோடி எனப் போற்றப்படும் அம்பானியின் கதை.
1980களில் இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியராக இருந்து அம்பானியை அம்பலப்படுத்திய அருண்ஷோரி, 2002இல் அம்பானி மரணமடைந்த போது பின்வருமாறு கூறினார்: “அம்பானி தகர்க்க வேண்டிய சட்டங்களைத்தான் தகர்த்தெறிந்தார். இன்று அந்த சட்டங்களெல்லாம் காலாவதியாகி தாராளமயம் அமலில் உள்ளது. இதற்காக இந்தியத் தொழிற்துறையே அம்பானிக்கு பெரிதும் நன்றிக் கடன் பட்டுள்ளது.” அருண்ஷோரி சுயவிமர்சனம் மட்டும் செய்து கொள்ளவில்லை. பா.ஜ.க. அமைச்சராக இருந்தபோது ஐ.பி.சி.எல். எனப்படும் அரசின் எண்ணெய்க் கம்பெனியை அம்பானியின் ரிலையன்சு நிறுவனத்துக்குச் சொந்தமாக்கி பிராயச்சித்தமும் செய்து கொண்டார்.
அருண்ஷோரி, மணிரத்தினம் மட்டுமல்ல ஆளும் வர்க்கங்களும், ஊடகங்களும் கூட இப்படித்தான் அம்பானியைக் கொண்டாடுகின்றன. சுமார் 35 இலட்சம் பங்குதாரர்கள் அம்பானியால் வசதியுடன் வாழ்கிறார்கள், “அம்பானியைப் போல ஒரு பத்து தொழிலதிபர்கள் இருந்தால் இந்தியா ஒரு பணக்கார நாடாகிவிடும்” என்று சுயமுன்னேற்ற மதத்தின் குருவாகவே அம்பானி சித்தரிக்கப்படுகிறார். இந்த குருவின் உண்மையான கதை என்ன?
தொழில் முனைவோர்களை வளரவிடாமல் நசுக்கிக் கொண்டிருந்த அரசாங்கத்தின் லைசன்ஸ் பெர்மிட் கோட்டா ராச்சியத்தைத் தகர்த்தார், பழம்பெருச்சாளிகளின் கோட்டையாக மோன நிலையில் தேங்கி இருந்த இந்தியத் தொழில்துறையை உடைத்து உள்ளே புகுந்து அதை விறுவிறுப்பானதாக்கினார் என்பதுதான் அம்பானிக்கு மணிரத்தினம் சூட்டும் புகழாரம்.
அன்று நேருவின் சோசலிசம் என்று புகழப்பட்டதும், தற்போது லைசன்ஸ், பெர்மிட், கோட்டா ராச்சியம் என்று இகழப்படுவதுமான அந்த கொள்கை, உண்மையில் தேசிய முதலாளிகளைத் தான் நசுக்கியதேயன்றி, டாடா பிர்லா போன்ற தரகு முதலாளிகளையல்ல. அதிகார வர்க்க முதலாளிகள் மற்றும் தரகு முதலாளிகளின் நலன்களை ஒரே நேரத்தில் பாதுகாக்கும்படி உருவாக்கப்பட்டிருந்த அந்தக் கொள்கையின் ஆதாயங்களை சட்டபூர்வமாகவும் சந்து பொந்துகளில் புகுந்து லஞ்ச ஊழல்களின் மூலமும் அனுபவித்துக் கொண்டே, அவ்வப்போது தம் அதிருப்தியையும் வெளியிட்டுக் கொண்டிருந்தனர் அன்றைய தரகு முதலாளிகள்.
பாரம்பரியத் தரகு முதலாளிகளைவிடத் திறமையாகவும், துணிச்சலாகவும் லஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு அரசு எந்திரத்தையும் சட்டங்களையும் தனக்கு ஏற்றபடியெல்லாம் வளைத்து, ஊடகங்களை விலைக்கு வாங்கி குறுகிய காலத்தில் கொள்ளை லாபம் ஈட்டினார் என்பதுதான் அம்பானியின் சாதனை. ரிலையன்சின் வளர்ச்சிக்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட்டன. ஏற்றுமதி செய்யும் மதிப்புக்கேற்ப இறக்குமதி செய்யலாம் என்ற விதிமுறையின் கீழ் மண்ணையும், மசாலாப் பொருட்களையும், படத்தில் வருவது போல் காலி அட்டைப் பெட்டிகளையும் ஏற்றுமதி செய்து உள்நாட்டில் கிராக்கியாக இருந்த ரேயான், நைலான், பாலியஸ்டர் செயற்கை இழைகளை இறக்குமதி செய்து பல மடங்கு இலாபம் ஈட்டினார். அம்பானியின் சாரத்துக்கு இந்த ஒரு சோறு முழுப்பதமாகும்.
அம்பானியின் ஆலைகளுக்கான இயந்திரங்கள் இறக்குமதி வரி செலுத்தாமல் மோசடி முறையில் கொண்டு வரப்பட்டதை கோயங்கா அம்பலப்படுத்தியதற்குக் காரணம் மணிரத்தினம் சித்தரிப்பது போல சில தனிமனிதர்களுக்கிடையே நடந்த ஈகோ பிரச்சினையோ, கோயங்காவின் அறவுணர்வோ அல்ல. புதிய தரகு முதலாளிகளின் பிரதிநிதியாக வந்த அம்பானியை பழையவர்களின் பிரதிநிதியான நுஸ்லிவாடியா எதிர்த்தார்.
அவர்களின் இந்த முரண்பாடு அரசியலிலும் பிரதிபலித்தது. அம்பானியை இந்திராவும் ராஜீவும் காங்கிரசும் ஆதரித்தன; வாடியாவை ஜனதா ஆதரித்தது. 1980 தேர்தலை இவ்விரண்டு முதலாளித்துவப் பிரிவினரும்தான் ஸ்பான்சர் செய்தனர். அந்தத் தேர்தலில் இந்திரா வென்றதற்காக அம்பானி விருந்து வைத்துக் கொண்டாடினார். அதன் பிறகு ரிலையன்சின் மோசடிகள் கொடிகட்டிப் பறந்தன. ராஜீவும், பிரணாப் முகர்ஜியும், முரளி தியோராவும் அம்பானியின் தூதர்களாக அரசாங்கத்தில் செயல்பட்டனர். பல சட்டங்கள் ரிலையன்சின் வளர்ச்சிக்காக இயற்றப்பட்டன, மாற்றப்பட்டன, ஒத்தி வைக்கப்பட்டன. “நாட்டின் ஆண்டு வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதற்கு முன்னர் ரிலையன்சின் அனுமதியைப் பெறும்” என்று ஒரு பழமொழியே டெல்லிப் பத்திரிக்கையாளர்களிடம் உருவாகியிருந்தது. மேல்மட்டத்து அதிகாரவர்க்கத்தின் பணிநியமன உத்தரவுகள் அரசாங்கத்திடமிருந்து வருவதற்குள் ரிலையன்ஸ் அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சென்றன.
வி.பி.சிங் பிரதமரானதும் அம்பானியின் மீது விசாரணைக் கமிஷன் நடந்து பல மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்தன. தொழில் வளர்ச்சியைத் தடுக்கும் பத்தாம்பசலிச் சட்டங்கள் என்ற கூட்டை உடைத்துப் பிறந்த இலட்சிய வேட்கை கொண்ட சுதந்திரப் பறவையாக அம்பானியை மணிரத்தினம் சித்தரித்திருப்பது அப்பட்டமான பித்தலாட்டமாகும். முதலாளித்துவத்துக்கு உரிய சுதந்திரம் வழங்கப்பட்டால், அது சட்டபூர்வமான வழிகளிலும், நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்டும் தனது சுரண்டலை நடத்தும் என்ற கருத்தே மோசடியானது. அத்தகைய சுதந்திரம் வழங்கப்படாததால்தான் அம்பானி சட்டத்தை மீற நேர்ந்தது என்று இந்தக் கிரிமினலுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார் மணிரத்தினம்.
90களில் தாராளமயக் கொள்கைகள் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு பூரண சுதந்திரத்தை வழங்கிய பின்னரும் என்ன நடந்தது? வில்போன் சேவைக்கு மட்டும் லைசன்சு பெற்ற ரிலையன்சு செல்போன் சேவையை முறைகேடாக அளித்து பல கோடி ரூபாய் கட்டண மோசடி செய்தது. இது அம்பலமானதும் அம்பானிக்குத் தகுந்தபடி சட்டத்தை மாற்றியது பா.ஜ.க. அரசு.
அடுத்து வெளிநாடு அழைப்புக்களை உள்ளூர் அழைப்புக்களாக மாற்றி சுமார் 1300 கோடி ரூபாய் பகற்கொள்ளை அடித்தது ரிலையன்ஸ். தேசத்துரோகம், மோசடி போன்ற கிரிமினல் குற்றங்கள் சாட்டப்பட்டன. சில கோடி ரூபாய் அபராதம் மட்டும் விதித்து வழக்கை முடித்துக் கொண்டது காங்கிரஸ் அரசாங்கம். ரிலையன்சின் நிறுவனங்கள் அனைத்தும் கொள்ளையில் பழுத்த புழுக்கள். இந்தக் கொள்ளையனைத்தான் இந்தியத் தொழில்துறையின் குரு என்கிறார் மணிரத்தினம்.
திரைப்படத்தில் ரிலையன்சின் பங்குதாரர்கள் ஏதோ ஒரு மக்கள் திரள் இயக்கம் போல சித்தரிக்கப்படுகிறார்கள். நட்சத்திர விடுதிகளில் நடந்து கொண்டிருந்த பங்குதாரர்கள் கூட்டத்தை திறந்தவெளி மைதானத்தில் நடத்தியவர், இலட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரைப் பங்குச்சந்தையை நோக்கிக் கவர்ந்திழுத்தவர் என்பவை நிஜத்திலும் அம்பானிக்குச் செலுத்தப்படும் புகழாரங்கள்.
இலட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரை நாட்டின் தொழில் வளர்ச்சியில் பங்கேற்கச் செய்தவர் அம்பானி என்பது போன்ற தோற்றம் இதன்மூலம் உருவாக்கப்படுகிறது. இலட்சக்கணக்கான சூதாடிகளை அம்பானி உருவாக்கினார் என்பதே உண்மை. பங்குச் சந்தையைப் பற்றிப் புரிந்து கொள்ளாதவரை இந்த உண்மையையும் புரிந்து கொள்ள இயலாது.
பங்குச் சந்தை வர்த்தகம் என்பதற்கும் நாட்டின் உண்மையான பொருளாதாரத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அதன் இலக்கணமே சூதாட்டம்தான். புளூ சிப் கம்பெனிகள் என்று அழைக்கப்படும் 10, 15 பெரிய நிறுவனங்களின் பங்குகள் வாங்கி விற்கப்படும் மதிப்பை வைத்துத்தான் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் தீர்மானிக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான பிற நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்தில் பலர் ஏமாறுவார்கள், சிலர் இலாபம் சம்பாதிப்பார்கள். பங்குகளின் முகமதிப்பு 10 ரூபாய் என்றால், அதன் சந்தை மதிப்பு 500 அல்லது 1000 ரூபாயாகக் கூட இருக்கும். இந்த விலை உயர்வை பன்னாட்டு நிதி நிறுவனங்களும், பங்குச் சந்தைத் தரகர்களும் செயற்கையான முறையில் உருவாக்குகின்றனர். பங்குகளுக்கான டிவிடெண்ட் எனப்படும் லாப ஈவுத் தொகை பங்கின் முகமதிப்பை வைத்தே வழங்கப்படுமேயன்றி அதுவும் இல்லை .
இந்நிலையில், சிறுமுதலீட்டாளர் எனப்படும் நடுத்தர வர்க்கத்தினர் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி அதில் கிடைக்கும் வருடாந்திர ஈவுத் தொகையால் ஒரு போதும் இலாபம் சம்பாதிக்க முடியாது. மாறாக, அந்த பங்கின் சந்தை மதிப்பு பலமடங்கு உயரும் போது அவற்றை விற்று இலாபம் சம்பாதிக்க முடியும் என்பதுதான் பங்குச் சந்தையின் கவர்ச்சி. நடுத்தர வர்க்கத்தின் ஒரு பிரிவினருக்குக் கிடைக்கக்கூடிய இந்த இலாபம் என்பது இன்னொரு பிரிவினரின் நட்டம். திரைப்படத்தில் மூன்று மகள்களின் திருமணத்தை ரிலையன்சின் பங்குகளை விற்றுத்தான் நடத்தினேன் என்று கூறி ஒருவர் அம்பானிக்காக உருகுகிறார். தோற்றுப்போன வேறொரு சூதாடியின் 3 மகள்கள் முதிர்கன்னிகளாக மறுகிக் கொண்டிருப்பார்கள் என்பதே இதன் பொருள்.
பங்குகளின் மதிப்பு ஏன் உயர்கிறது, ஏன் சரிகிறது என்று தெரியாமல் நடுத்தர வர்க்கம் தத்தளித்துக் கொண்டிருக்க, இந்த உயர்வையும் சரிவையும் திரைமறைவில் இருந்து ஆட்டிவைக்கும் அம்பானிகளும், பன்னாட்டு நிதி நிறுவனங்களும் ஒவ்வொரு உயர்விலும் ஒவ்வொரு சரிவிலும் கோடிக்கணக்கில் சுருட்டிக் கொள்வார்கள். இந்த நரவேட்டையில் இவர்களோடு சேர்ந்து சில எலும்புகளைக் கடிக்கும் வாய்ப்பு கிட இல்லை .
70, 80களில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்குகளை வெளியிட்டபோது அது அவரது மாநிலமான குஜராத்தில் பெரு வெற்றி பெற்றது. இன்றைக்கும் ரிலையன்சின் பங்குதாரர்களில் பெரும்பான்மையினர் குஜராத்தைச் சார்ந்த பனியாக்களே. இந்தச் சூதாடி வர்க்கம்தான் இந்துத்துவ வெறி எனும் அரசியல் ஒழுக்கக் கேட்டிலும் முன்னணியிலிருக்கிறது என்பதையும் வாசகர்கள் இங்கே ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.
நாடா குத்துபவன் போல தனது பினாமி கம்பெனிகள் மூலம் ரிலையன்ஸ் பங்குகளைத் தானே வாங்கினார் அம்பானி. பங்குகளின் விலையை செயற்கையாக உயரச் செய்தார். விலை குறையும்போது தானே தனது பங்குகளை வாங்கி விலை சரியாமல் இருத்தவும் செய்தார். பணம் தேவைப்பட்ட போது, கடன் பத்திரங்களை வெளியிட்டார். கடன் பத்திரங்களுக்கு சட்டப்படி வட்டி கொடுத்தே ஆகவேண்டும். ஆனால் பங்குகளுக்கு ஈவுத்தொகை கொடுக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒரு கட்டத்தில் அவருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, அரசியல் செல்வாக்கால் கடன் பத்திரங்களையே பங்குகளாக மாற்றிக் கொண்டார். ஆண்டுதோறும் வட்டி கிடைக்கும் என்று நம்பி கடன் பத்திரங்களை வாங்கிய நடுத்தரவர்க்கத்திற்குப் பட்டை நாமம் போட்டார்.
இத்தனையும் செய்து விட்டு, சாவதற்கு முன்பு ஒரு தத்துவத்தையும் சொன்னார் அம்பானி: “ரிலையன்சை நான் உருவாக்கினேன் என்பது உண்மைதான். அம்பானிகள் வரலாம், போகலாம். ஆனால் ரிலையன்சின் பங்குதாரர்கள் அதை உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள்” என்றார். ஆனால் அம்பானி செத்த இரண்டே வருடங்களுக்குள் அவரது மகன்கள் அம்பானியின் இந்த மரண வாக்குமூலமும் பொய்யே என்பதை நிரூபித்து விட்டார்கள்.
ரிலையன்சின் 52% பங்குகள் பொதுமக்கள் வசம் இருப்பதாகவும், 43% பங்குகளை பன்னாட்டு, உள்நாட்டு நிதி நிறுவனங்கள் வைத்திருப்பதாகவும், எஞ்சியுள்ள 5 சதவீத பங்குகள்தான் தங்கள் வசம் இருப்பதாகவும் அம்பானி குடும்பத்தினர் புளுகி வந்தனர். புத்திரர்களின் சொத்துச் சண்டையில் இந்தப் புளுகுணியாட்டமும் வெட்டவெளிச்சமானது. பொதுமக்களது கையில் இருக்கும் பங்குகள் உண்மையில் 13 சதவீதம் மட்டுமே. மீத 39 சதவீதம் அம்பானியின் பினாமி நிறுவனங்களிடம் இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 500ஐத் தாண்டும்.
மேட்ரிக்ஸ் எனும் ஆங்கிலப் படத்தில் பிரம்மாண்டமான கணினியொன்று செயற்கையான காட்சி உலகை உருவாக்கி எது மெய் எது பொய் என்று அறிய முடியாத குழப்பத்தை உருவாக்குவது போல, அடியையும் நுனியையும் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் இந்த பினாமி கம்பெனிகளை உருவாக்கியிருக்கிறார் அம்பானி. முதலீட்டாளர்களையும் அரசாங்கத்தையும் ஒரே நேரத்தில் ஏமாற்றும் இந்த கிரிமினல் குற்றம், வாரிசுச் சண்டையில் அம்பலமாகி நாறியது.
எனினும், ரிலையன்ஸ் குடும்ப பிரச்சினையில் அரசு தலையிடாது என ப.சிதம்பரமும், ஏனைய மத்திய அமைச்சர்களும் அறிவித்தனர். இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்கள், அம்பானி வளர்த்த சாம்ராஜ்ஜியம் இப்படி அழியலாமா என்று சோக கீதம் இசைத்தனரேயொழிய யாரும் அம்பானி குடும்பத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று எழுதவில்லை, அவர்களால் சூறையாடப்பட்ட சிறுமுதலீட்டாளர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தக் கூட இல்லை.
நாம் இந்தியாவிலேயே முதல் கம்பெனியானால் போதுமா, உலகத்திலேயே முதல் கம்பெனி ஆகவேண்டாமா” என்று பங்குதாரர்கள் கூட்டத்தில் குரு முழங்கும் காட்சியுடன் படம் முடிகிறது. அன்று குருவின் மோசடிகள் என்று கூறப்பட்டவை அனைத்தும் இன்று சட்டபூர்வமாக்கப்பட்டு விட்டன. நடுத்தரவர்க்கத்துக்குப் பேராசை காட்டி பங்குச் சந்தைச் சூதாட்டத்தை நோக்கி அன்று அம்பானி கவர்ந்திழுத்தார் என்றால் இன்று ப.சிதம்பரம், நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புகளைப் பங்குச் சந்தையை நோக்கி நெட்டித் தள்ளுகிறார்.
வங்கிகளின் வைப்புநிதி, தபால் சேமிப்பு, அரசின் கடன் பத்திரங்கள் ஆகிய அனைத்துக்கும் வட்டி விகிதத்தைக் குறைத்து, நடுத்தரவர்க்கம் தனது சேமிப்பை பங்குச் சந்தையில்தான் போடவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார் சிதம்பரம். இதுவும் போதாதென்று தற்போது தொழிலாளர்களின் சேமநல நிதி மூன்று இலட்சம் கோடி ரூபாயையும், பென்சன் நிதியையும் பங்குச் சந்தையில் வைத்துச் சூதாடவிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இப்படி போதும் போதுமென்னும் அளவுக்கு முதலீட்டுக்கான பணம் தளும்பி வழிந்தும் பங்குதாரர்களைக் கொள்ளையடிக்கும் அம்பானியிசம் முடிவுக்கு வந்துவிடவில்லை.
ஒரு தபால் கார்டு விலையில் ஃபோன் பேசலாம் திருபாய் அம்பானி கனவுத் திட்டம்” என்ற பெயரில் பங்குச் சந்தையில் குதித்த ரிலையன்ஸ் இன்போகாம், ஒரு பங்கின் முகமதிப்பு ரூபாய் ஒன்று எனவும் பிரீமியம் மதிப்பு 49 ரூபாய் என 50 ரூபாயில் பங்குகளை வெளியிட்டது. இதற்கு 10 வருடங்களுக்கு ஈவுத் தொகையோ வட்டியோ கிடையாது என்ற நிபந்தனையும் உண்டு. பிரீமியம் எனப்படுவது அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படும் போலி மதிப்பு ஆகும். இந்தப் பங்குகள் வெளியீட்டில் முகேஷ் அம்பானியும், ரிலையன்சின் மேல்மட்ட அதிகார வர்க்கக் கும்பலும் தொழில் முனைவோர் என்ற பெயரில் பெருமளவு பங்குகளை தம் வசம் வைத்துக் கொண்டு 1 ரூபாய் விலையில் வாங்கிய பங்குகளை 50 ரூபாய்க்கு விற்று கோடிக்கணக்கில் சுருட்டினர். வாரிசுரிமைச் சண்டையின்போது அனில் அம்பானி கும்பல் இதை அம்பலப்படுத்தியது. அவலையும் உமியையும் கலந்து விற்கும் இந்தக் கலவையைத் திறமை என்று போற்றுவதா, மோசடி என்று குற்றம் சாட்டுவதா?
‘அம்பானி ஒரு வெற்றிக் கதை’ என்ற புத்தகத்தை எழுதிய என்.சொக்கனது கண்ணோட்டப்படி “இது நடுத்தர வர்க்கப் பங்குதாரர்க ளின் அசட்டுத்தனத்துக்குக் கிடைத்த தண்டனை.
விளம்பரப் படத்தைப் போட்டுக் காட்டுவதற்கு இரசிகர்களிடம் காசு வசூலிக்கப்பட்டதாக எங்கேயாவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் அம்பானி. செத்தபின்னும் திருடுவார், திருட்டுபாய் அம்பானி”
அம்பானி படத்தில் கை கால் வராமல் இருக்கும் போது தானே அப்படி இருப்பதாய் ரசிகர்கள் உணந்தார்கள் உண்மையாய் நடந்த போது தரகர்களும்,பத்திரிக்கைகளும் நம்மையும் அப்படி இருக்க சொன்னார்கள்.திரு பாய் அம்பானியின் மனைவி விதவையானது குறித்து நாடே துக்கம் கொண்டது.ஆனால் மழைக்கு செத்து போன 150 பேரின் கவலையோ இங்கிலாந்து தாயகம் திரும் பியவுடனே மறந்து போனது. ஆயிரக்கனக்கான கொடிகள் மதிப்புள்ள எண்ணை வயல்கள் அரசால் கொடிகளுக்கு விற்கப்பட்டன . இன்று தன் ரெண்டு பையன்களுக்கும் தலா லட்சம் கோடி இருக்கின்றதெனில் அது உண்மையில் 80 கோடி பேர் சாப்பாட்டுக்கு வழியின்றி இருப்பதாலேயே சாத்தியமாயிற்று
“அவரு வெளிநாட்டுல பெட்ரொல் பம்ப் புடிச்சவரு” என அங்கலாய்ப்பவர்கள் ஏரினை அப்போதிலிருந்து இன்று வரை உழுது கொண்டிருக்கும் நம் பாட்டன்கள் ஏன் பிச்சைகாரனாக்கப்பட்டார்கள் என்ற கேள்விக்கு அது விதியென்று மட்டும் தான் பதில் சொன்னார்கள் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தில்.வெளினாட்டு கால்களை லோக்கல் கால் என பொய் சொல்லி நூற்று கணக்கான கோடிகளை கட்டாமல் ஏய்த்து வரும் இந்த நாய்களுக்கு போலீசு பாதுகாப்பு,நீதி மன்றமோ சப்பைகட்டு,அவர்களாய் சுரண்டப்பட்ட மக்களுக்கோ குண்டாந்தடியும்,அல்சரும் தான் இலவசமாய் கிடைக்கும்
பிடித்த புத்தகம்
ஹாரி பாட்டர்.
ஷிட்னி ஷெல்டன்
ஜெப்ரி ஆர்தர்.
டேனியல் ஸ்டீல்
தி.ஜானகிராமன்,ஜெயகாந்தன்,சாண்டில்யன், சுஜாதா,கல்கி
பொன்னியின் செல்வன்,சிவகாமியின் சபதம்.
மற்றும் பல
இதையெல்லாம் சும்மா போட்டுக்கலாமா. இல்ல உண்மையாவே படிச்சாதான் போடனுமா?
இந்த பகுதில பிடிச்ச வலைப்பதிவ போடலாமா? அப்படி போடலாம்னா சுஜாதா அளவுக்கு எழுதாட்டியும் அவர் கணவர் ரங்கராஜன் மாதிரி எழுதற என் வலைப்பூவை ஏன் யாருமே இதுல போடலை.?
பி:கு: சில சீரியஸான பதிவெழுதி களைச்சிபோயிட்டேன், அதான் இப்படி மன்னிச்சு விட்டுரு
this is......I Love You In 21 Different Languages!
Bengali - Aami Tumaake Bhaalo Baashi
Polish - Ja Kocham Ciebie
French - Je T'aime
Hindi - Hum Tumhe Pyar Karte Hai
Czech - Miluji Te
Slovakian - Lu'Bim Ta
Italian - Ti Amo
Ukrainian - Ya Tebe Kahayu
German - Ish Libe Dish
Chinese - Wo Ai Ni
Greek - S'agapo
Hawaian - Aloha Wau Ia Oi
Lithuianian - Tav Myliu
Korean - Sa Rang Hae Yo
Japanese - Ai Shi Te Ru
Romanian - Te Ubsec
Bosnian - Volim Te
Albanian - Te Dua
Filipino - Mahal Kita
Spanish - Te Amo
அன்னைக்கு அர்ப்பணம்..!!
தனக்கென்று வாழா
தன்னிகரற்ற ஜீவன் நீ..!
கணக்கின்றி இரவுகளில்
கண் விழித்து காத்தவள் நீ..!
எனக்கென்று உதிரம் தந்த
என் அன்னை நீ..!
பிணக்கென்ற நேரமெல்லாம்
பிள்ளை பாசம் பொழிந்தவள் நீ..!
உனக்கென்று எதுவும் தேடா
உத்தம பெண் நீ..!
அன்னை வடிவில் வந்த
அன்பின் அவதாரம் நீ.!
என்னை காத்து வளர்த்த
என் இதய தெய்வம் நீ..!
கண்ணின் இமை போல்
கருத்தாய் பார்த்தவள் நீ..!
தன்னலம் மறந்தே போன
தகைமை வாய்ந்த தாய் நீ..!
என்ன செய்து கடன் தீர்ப்பேன்..?
என்று உன் மடி பார்ப்பேன்..?
என் செல்லத்தாயே...
எனக்கு எல்லாம் நீயே..!!
கி.பி. 2039. ஒரு கிரிக்கெட் போட்டி
Get rid of Add-Ons in your email ID. Get yourname@ymail.com. Sign up now!
வடிவேலுவும் கமலும் உரையாடல்:
வருங்கால முதல்வர் யார் ?
என்று வாழப்போகிறாய் மானத்துடன் மனித இனமாய்...!?
புதிய மதத்தில் கடவுள் இல்லை
இந்த புதிய மதத்தில்
கடவுள் இல்லை
கடவுளின் தூதனும் இல்லை.
வழிபாட்டு முறையும் இல்லை
வழிபாடும் இல்லை.
நீங்கள் சேர்ந்தாலும்
சேராவிட்டாலும்
தொல்லையுமில்லை.
இதன் ஒரே தேவை
நேர்மையுடன்
சுய விமர்சனம்.
நம்ம விஜய டி ஆர் த்ரிஷா கிட்ட காதலை சொன்னா
அன்பே த்ரிஷா,
நீ தான் என் மோனாலிசா
இழுக்க இழுக்க வர்றது ஜவ்வு!
நான் உன்னை தாறுமாறா பண்ணுறேண்டி லவ்வு!
ரவையை வெச்சு கிண்டுறது உப்புமா!
நீ என்னை கண்டுக்காம இருக்குறது ரொம்ப தப்புமா!
முட்டையை உடைச்சா போடுறது ஆம்லேட்டு
என்னைப் புரிஞ்சுக்கிறதுல எப்பவுமே நீ லேட்டு!
சின்ன பசங்க ஆடுறது கோலி
உங்கப்பன் என்னை பார்த்தான்னா நான் காலி!
ஆற்காட்டில ஃபேமஸ் பிரியாணி
நம்ம காதலுக்கு எவன் குறுக்க வந்தாலும் அவன் மண்டைல நான் அடிப்பேன் பெரிய ஆணி
டி ஆர் னு சொன்னா ஞாபகம் வர்றது தாடி!
நீ கண்டிப்பா வருவ என்னைத்தேடி!
ஆக மொத்தம் நீ தான் என் டிஸ்னி வேர்ல்டு!
நம்ம காதலுக்கு உங்கப்பன் தான் ஆக்ஸா பிளேடு!!
பில்கெட்ஸுக்கு ஒரு நகைச்சுவைக் கடிதம்
ஐயா பில்கேட்ஸு,சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.
1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.
2. விண்டோஸில் "Start" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன் இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்
.3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில் அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "sit" என மாற்றிவிடுங்கள். அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.
4. "Recycle Bin" என்பதை "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால் என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.
5. "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் "Find*" *மெனுவிற்குச் சென்று தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர் என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத் தாருங்கள்.
6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன் வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog தரவும், பூனையை விரட்டுவதற்கு.
7. நான் தினமும் "Hearts*" *விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில் தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?
8.என்னுடைய குழந்தை "Microsoft word" கற்று முடித்து விட்டான். நீங்கள் எப்போது "Microsoft sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.
9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும் விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer" ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?
10. என்னுடைய கம்ப்யூட்டரில் "My pictures*"* என்று ஒரு ஃபோல்டர் உள்ளது. அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப் போடப்போகிறீர்கள்?11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி "Microsoft Home" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?
மேல உள்ள எதையுமே சத்தியமா நான் எழுதலைங்க.எங்க ஊரு பத்திரிகை ஒன்னுல வன்துச்சு
பி போஸ்ட் Sridhar
வித்தியாசமான சட்டங்கள் ; விபரீதமான சம்பிரதாயங்கள்...!
இந்த மாதிரி தத்துவங்கள் எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீங்களா ?
எழுதியவர் : Sridhar
இந்த மாதிரி தத்துவங்கள் எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீங்களா ? இன்னும் நிறைய இருக்கு .... இப்ப 30 தான் எழுதி இருக்கிறன்....! வாசிச்சு பாத்திட்டு கருத்தை எழுதுங்கோ .....!
பட்டர்பிளை(Butterfly) பிளை (fly) ஆகும் ........ கட்டர் 'பில்லர் (catterpillar)_ பில்லர் ஆகுமா ?
என்னதான் கருணாநிதி திமுக_வுல இருந்தாலும் அவர் வீட்டு _மாடு " அம்மா " னு_தான் கத்தும்.
வாழைமரம் தார் போடும் ! ஆனா அத வச்சி ரோடு போட முடியுமா ??
என்னதான் ஏரோபிளேன்(aeroplane) மேல பறந்தாலும் பெற்றோல் போட கீழதான் வரணும் .
கான்ட் வாஷ் 'ன்னா கை கழுவறது , 'பேஷ் வாஷ் 'ன்னா முகம் கழுவறது , அப்ப ' பிரைன் வாஷ் ' ன்னா ,, ப்ரைன கழுவறதா
டி கப்ல டி இருக்கும் .அப்ப வேர்ல்ட் கப்ல வேர்ல்ட் இருக்குமா ??
செல் மூலமா sms அனுப்பலாம் ஆனா sms மூலமா செல்ல அனுப்ப முடியாது
அடையார் ஆனந்தபவன் பிரான்ச்(Branch) சென்னை புல்லா இருக்கும் ... ஆனா அடையார் ஆலமரத்தோட பிரான்ச் அடையார் -ல மட்டும் தான் இருக்கும் .. இது தான்
உலகம்
டெய்லி காலண்டர்-லே தேதி கிழிக்கறது முக்கியம் இல்லை – அந்த தேதி-லே நீ என்ன கிழிக்கரே -ங்கறது தான் முக்கியம் !!
பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட தியேட்டர் -ல ரிலீஸ் பண்ண முடியாது ...
ரேஷன் கார்டு வச்சு சிம் கார்டு வாங்கலாம் _ ஆனா சிம் கார்டு வச்சு ரேஷன் கார்டு வாங்க முடியாது .
நீங்க என்ன தான் தீன போட்டு கோழி வளத்தாலும் அது முட்ட தான் போடும் 100/100 எல்லாம் போடாது .
கண்ணா பஸ் ஸ்டாப் ல பஸ் தான் வந்து நிக்கும் அனா புல் ஸ்டாப் ல புல் l வந்து நிக்குமா ?
பாக்கு மரத்துல பாக்கு இருக்கும் , தேக்கு மரத்துல தேக்கு இருக்கும் , ஆனா பன மரத்துல பணம் இருக்காது ..!!
சைக்கிள் ல போனா சைக்கிளிங் , ட்ரைன்ல (train) போனா ட்ரைனிங்கா ?
மெக்கானிக்கல் என்சினியர் மெக்கானிக் ஆகலாம் ஆனா சாப்ட்வேர் என்சினியர் சாப்ட்வேர் ஆகா முடியாது ..
கொசு கடிச்ச டோர்டாயஸ்(tortoise) கொளுத்திவைக்கலாம் ஆனா டோர்டாயஸ்(tortoise) கடிச்சா கொசுவைகொளுத்திவைக்கமுடியுமா...?
கீ போர்ட்ல கீ இருக்கும் ஆனா மதர் போர்ட்ல மதர் இருக்குமா...?
நீ எவளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால் ல போய் படிக்க முடியாது .
ஸ்கூல்ல டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ......... காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ....... ஆனா ப்லோட் (blood) டெஸ்ட்ல பிட் முடியாது ..
என்ன தான் நாய் நன்றி உள்ளதா தான் இருந்தாலும் அதால தாங்யூ(thank you) சொல்ல முடியாது !!!!!!!! இதுதான் வாழ்க்கை .
லஞ்ச் பாக்ல லஞ்ச் கொண்டு போக முடியும் ... ஆனா ஸ்கூல் பாக்ல ஸ்கூல்_ல கொண்டு போகமுடியுமா ?
ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்தி ஒன்னு தான் பெருசு ...
என்னதான் அஹிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்திய சுட்டு தான் சாப்பிட முடியும் ..
நீ என்ன தான் வீரனா இருந்தாலும் , குளிர் அடிச்சா திரும்ப அடிக்க முடியாது ..
காசு இருந்த கால் டாக்ஸி !!! காசு இல்லேன்னா கால் தான் டாக்ஸி !!!
கோவில் மணிய நம்ம அடிச்சா சத்தம் வரும் ... ஆனா கோவில் மணி நம்மள அடிச்சா ரத்தம் தான் வரும் .
மெழுக வச்சு மெழுகு வத்தி செய்யலாம் ... ஆனா கொசுவ வச்சி கொசு வத்தி செய்ய முடியாது..
பல்லு வலின்னா பல்ல புடுங்கலாம் ஆனா கண்ணு வலினா கண்ண புடுங்க முடியுமா .....?
இட்லி பொடிய தொட்டு இட்லி சாப்பிடலாம் ___ ஆனா மூக்கு பொடிய தொட்டு மூக்க சாப்பிட முடியாது.
பிளாஷ் டிரைவ், மெமரி கார்ட் , ஹார்ட் டிஸ்கில் அழித்த பைல்களை மீட்க
ஹாட் டிஸ்கில் அல்லது யு.எஸ்.பியில் சேமித்து வைத்திருந்த முக்கியமான ஒரு பைலை தவறுதலாக அழித்து விட்டீர்களா? கவலை வேண்டாம். அழித்த பைல்களை மீட்டுக் கொள்ளலாம். அது எப்படி சாத்தியம்?இதற்காக இரண்டு மென்பொருட்களை கீழே தருகிறேன். ஒன்று டிஸ்க் டிக்கர்(Disk Digger) இன்னொன்று ரெகுவா(Recuva) . இவை இரண்டினுடைய தொழிற்பாட்டையும் விரிவாக பார்ப்போம்.1.டிஸ்க் டிக்கர் (Disk Digger)கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் மட்டுமின்றி பிளாஷ் டிரைவ், டிஜிட்டல் கேமரா மெமரி மற்றும் பிற மெமரி மீடியாக்களில் அழித்த பைல்களையும் மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.மீண்டும் பார்மட் செய்யப் பட்ட அல்லது சரியாக பார்மட் செய்யப்படாத டிஸ்க்குகளில் இருந்தும் பைல்களை மீட்டுத் தரும் என்பது கூடுதல் சிறப்பு. Disk Digger ஒரு இலவச புரோகிராம். விண்டோஸ் இயக்கத்தில் இயங்குகிறது. இதனை உருவாக்கியவர் டிமிட்ரி ப்ரையண்ட் என்பவர். இது ஓர் அளவில் சிறிய எக்ஸிகியூட்டபிள் புரோகிராம்.ஒரு ஸிப் பைலுக்குள்ளாகக் கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இதன் எக்ஸிகியூட்டபிள் பைலை இயக்கி எந்த டிரைவினை ஸ்கேன் செய்திட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும்.அழிந்த பைல்களை மீட்டுத் தர இரு வழிகள் தரப்பட்டுள்ளன. ஆழமாக ("dig deep") டிரைவ்களில் மூழ்கி அழிக்கப்பட்ட பைல்களைத் தேடுதல். இந்த வகையில் முழு டிரைவும் ஸ்கேன் செய்யப்பட மாட்டாது. விண்டோஸ் இயக்கத் தில் நாம் அதிகம் புழங்காத பைல் வகைகளை விட்டுவிடும்.அதிக ஆழமாகத் தேடும் வகையில் இந்த புரோகிராம் அழித்த பைல் குறித்த தகவல்களைப் பெறும். ஆனால் பைலின் பெயரைப் பெற்றுத் தராது. எந்த எந்த அழிக்கப்பட்ட பைல்களை மீண்டும் பெற முடியும் என்று அதன் பெயர்கள் அல்லது தானாக அமைந்த பெயர்கள், உருவாக்கப்பட்ட தேதி, எடிட் செய்யப்பட்ட தேதி, பைலின் அட்ரிபியூட்ஸ் என்று சொல்லப் படுகிற பைலின் தன்மை, அதன் அளவு ஆகியவை பட்டியலிடப் படும்.இந்த பட்டியலைப் பார்த்து இன்னும் அந்த பைலில் டேட்டா பத்திரமாக உள்ளதா என அறிந்து கொள்ளலாம். பின் அந்த பைல் அல்லது பைல்களைத் தேர்ந்தெடுத்து Restore selected file(s)” என்ற கட்டளை கொடுக்கலாம். அதன் பின் எந்த டைரக்டரியில் இந்த பைல்களை வைத்திட வேண்டும் எனத் தேர்ந்தெடுத்து கட்டளை கொடுத்தால் பைல்கள் மீட்கப்பட்டு நமக்குக் கிடைக்கும்.தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்2.ரெகுவா(Recuva)இந்த புரோகிராம் பயன்படுத்த எளிதானது. விரைவில் டவுண்லோட் ஆகிறது. இன்ஸ்டால் செய்தவுடன் இயக்கி உங்களுக்கு அழிந்த பைல் குறித்து என்ன மாதிரி உதவி தேவை என இந்த புரோகிராமே கேட்டு வழி நடத்துகிறது.எடுத்துக் காட்டாக ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அழித்த பைல்கள் எனக்கு மீண்டும் வேண்டும் எனத் தந்த போது ஆச்சரியப்படத் தக்க வகையில் அனைத்து பைல்களும் திரும்பக் கிடைத்தன. இழந்த பைல்களை மீட்பதில் இந்த புரோகிராம் அனைத்து வகை உதவிகளையும் தருகிறது என்பதில் சந்தேகமில்லை.மிகச் சிறப்பான முறையில் இந்த புரோகிராம் வடிவமைக்கப்பட்டு இருப்பதனை அறிய முடிந்தது.