Wednesday, July 8, 2009

பிடித்த புத்தகம்

ஆர்குட் புரொபைளில், பிடித்த புத்தகம் பகுதியில் கீழ்கண்ட பெயர்களை காணலாம்

ஹாரி பாட்டர்.
ஷிட்னி ஷெல்டன்
ஜெப்ரி ஆர்தர்.
டேனியல் ஸ்டீல்

தி.ஜானகிராமன்,ஜெயகாந்தன்,சாண்டில்யன், சுஜாதா,கல்கி
பொன்னியின் செல்வன்,சிவகாமியின் சபதம்.

மற்றும் பல

இதையெல்லாம் சும்மா போட்டுக்கலாமா. இல்ல உண்மையாவே படிச்சாதான் போடனுமா?

இந்த பகுதில பிடிச்ச வலைப்பதிவ போடலாமா? அப்படி போடலாம்னா சுஜாதா அளவுக்கு எழுதாட்டியும் அவர் கணவர் ரங்கராஜன் மாதிரி எழுதற என் வலைப்பூவை ஏன் யாருமே இதுல போடலை.?

பி:கு: சில சீரியஸான பதிவெழுதி களைச்சிபோயிட்டேன், அதான் இப்படி மன்னிச்சு விட்டுரு

this is......I Love You In 21 Different Languages!

English - I love you.

Bengali - Aami Tumaake Bhaalo Baashi

Polish - Ja Kocham Ciebie

French - Je T'aime

Hindi - Hum Tumhe Pyar Karte Hai

Czech - Miluji Te

Slovakian - Lu'Bim Ta

Italian - Ti Amo

Ukrainian - Ya Tebe Kahayu

German - Ish Libe Dish

Chinese - Wo Ai Ni

Greek - S'agapo

Hawaian - Aloha Wau Ia Oi

Lithuianian - Tav Myliu

Korean - Sa Rang Hae Yo

Japanese - Ai Shi Te Ru

Romanian - Te Ubsec

Bosnian - Volim Te

Albanian - Te Dua

Filipino - Mahal Kita

Spanish - Te Amo

அன்னைக்கு அர்ப்பணம்..!!

அம்மா..!
தனக்கென்று வாழா
தன்னிகரற்ற ஜீவன் நீ..!
கணக்கின்றி இரவுகளில்
கண் விழித்து காத்தவள் நீ..!
எனக்கென்று உதிரம் தந்த
என் அன்னை நீ..!
பிணக்கென்ற நேரமெல்லாம்
பிள்ளை பாசம் பொழிந்தவள் நீ..!
உனக்கென்று எதுவும் தேடா
உத்தம பெண் நீ..!

அன்னை வடிவில் வந்த
அன்பின் அவதாரம் நீ.!
என்னை காத்து வளர்த்த
என் இதய தெய்வம் நீ..!
கண்ணின் இமை போல்
கருத்தாய் பார்த்தவள் நீ..!
தன்னலம் மறந்தே போன
தகைமை வாய்ந்த தாய் நீ..!
என்ன செய்து கடன் தீர்ப்பேன்..?
என்று உன் மடி பார்ப்பேன்..?
என் செல்லத்தாயே...
எனக்கு எல்லாம் நீயே..!!

கி.பி. 2039. ஒரு கிரிக்கெட் போட்டி

கி.பி. 2039.

ஈடன் கார்டன் மைதானம்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம்.

ஆரம்பத்தில் 5 நாள் டெஸ்ட் போட்டியாக ஆரம்பித்த கிரிக்கெட் ஒரு நாளாக மாறி 20-20 ஓவர் போட்டிகளாக சுருங்கியது.

2012 ல் மக்களுக்கு அதுவும் போர் அடிக்க துவங்க அதனை 10-10 ஆக குறைத்தார்கள்.

பத்து ஓவர் மேட்சையும் விரைவில் 'ரொம்ப ஓவர்..' என நினைத்து 5-5 ஆக 2020ல் மாற்றினார்கள்.

நல்ல வேளையாக அடுத்த பத்து வருடங்களுக்கு அதை ஒன்றும் செய்யாதது கிரிக்கெட்டின் பாக்கியம் என்று தான் சொல்ல வேண்டும்.

2030ல் மெதுவாக " 5-5 மேட்சை பார்ப்பதற்கு ரொம்ப மண்டை காயுது..எவனால ஆகும்...ஒரு ஓவர் மேட்சாக சுருக்கினால் மேட்ச் சூடு பிடிக்கும்.." என்று எவனோ ஒரு புண்ணியவான் ஆரம்பித்தான்.

விரைவிலேயே ஒரு ஓவரும் வந்தது. 6 பவுலர்கள் வந்து ஆளுக்கு ஒரு பந்தை வீசினார்கள்.

பதினைந்து நிமிடத்தில் மொத்த மேட்சும் முடிந்தது.

எல்லாம் நன்றாக தான் போய்க் கொண்டிருந்தது.

ஆனால் கொஞ்ச நாளிலேயே வழக்கம் போல் ஒரு ஓவரையும் இன்னும் குறைக்க முடியுமா என சில அறிவு ஜீவிகளின் குழு உட்கார்ந்து யோசித்தது.

இந்த சமயத்தில் தான் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியானது.

' மிக விரைவாக இயங்கி கொண்டிருக்கும் நம் உலகில் மெதுவாக கிரிக்கெட் அதன் அந்தஸ்தை இழந்து வருகிறது. மிக நீண்ட இரண்டு ஓவர்களை பார்ப்பது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே கிரிக்கெட்டின் சுவாரசியத்தை கூட்ட இந்த 2039 ஆண்டு உலகக்க் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரு சிறந்த மாற்றத்தை செய்துள்ளோம். அது போட்டியை விறுவிறுப்பாக்கி கிரிக்கெட்டின் பக்கம் ரசிகர்களை ஈர்க்கும் என்று சொன்னால் மிகையாகாது.'

முதல் போட்டி இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும்.

மைதானத்தில் 'என்ன மாற்றம் செய்திருப்பார்கள்?' என்ற ஆர்வத்தோடு ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

போட்டி ஆரம்பிக்க தயாரனது.

இந்திய கேப்டனும் ஆஸ்திரேலிய கேப்டனும் மேட்ச் ரெஃப்ரியுடன் மைதானத்துக்குள் நுழைந்தனர்.

இந்திய, ஆஸ்திரேலிய ரசிகர்கள் கொடிகளை அசைத்து ஆரவாரம் செய்தனர்.

இந்திய கேப்டன் நாணயத்தை எடுத்து டாஸ் போட தயாரானார்.

ரசிகர்கள் கரகோஷம் செய்தனர்.

ஆஸ்திரேலிய கேப்டன் ' Tail..' என்று கேட்க, விழுந்தது தலை.

இந்திய கேப்டன் புன்னகைத்தார்.

ரெஃரி இந்திய கேப்டனுக்கு கை கொடுத்தார். " Congrates..."

மைதான டி.வி. திரையில் " இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று விட்டது'" என்று அறிவிக்கப் பட்டது.

இந்திய வீரர்கள் சந்தோஷத்தில் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து கும்மாளமிட்டனர்.

இந்திய ரசிகர்கள் ஆச்சரிய வெற்றிக் களிப்பில் கோஷமிட்டவாறு கலைந்து செல்ல துவங்கினர்.

'அடுத்த மேட்சிலேயும் இதே மாதிரி சூப்பரா காசை சுண்டி ஜெயிச்சுரணும்' என்று இந்திய கேப்டன் நினைத்துக் கொண்டார்.

போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ஒரு வயதான கிரிக்கெட் ரசிகர் தலையில் அடித்துக் கொண்டார்.

"எவ்வளவு கவுரவமா இருந்த கிரிக்கெட்..! இப்படி சுண்டாமுத்து ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டானுக...ரொம்ப ஓவரா தான் போறானுக.."


Get rid of Add-Ons in your email ID. Get yourname@ymail.com. Sign up now!

வடிவேலுவும் கமலும் உரையாடல்:



வடிவேலு: வாங்கய்யா உங்கள பேட்டி எடுக்க சொல்லி வலை உலகத்தில கேட்டுக்கிட்டாக வந்து கொடுங்கய்யா கொடுங்க?

கமல்ஹாசன் : அய்யா என்று அழகு தமிழில் அழைத்தமைக்கு நன்றி, அய்யா என்றழைக்காமல் கமல்ஹாசன் என்றழைத்தாலே சந்தோசப்பட்டிருப்பேன்.அதற்காக நீங்கள் அய்யா என்று அழைத்ததற்கு மகிழ்ச்சி இல்லை என்று நான் சொல்லமாட்டேன்.கம்பராமாயணத்தை புரிந்துகொண்ட தமிழர்களுக்கு இது புரியாதா என்ன. நீங்கள் சொல்லும் வலை உலகம் அறிவியலின் குழந்தை அதை யாரும் தடுக்க முடியாது என்பதுதான் உண்மை.ஆனால் உலகமே ஒரு வலை அதை அறிவியலால் தடுக்கமுடியாது.

வடிவேலு: கம்பராமாயணம் நான் படிச்சதில்லை, ஆனா நீங்க சொல்றது எனக்கு புரிஞ்ச மாதிரியே இருக்கு, உங்க படம் மருதநாயகம் என்ன ஆச்சு?

கமல்ஹாசன் : தேவர் மகனில் நான் உங்களை நடிக்க அழைக்கும்போது உங்களை இசக்கியாக பார்த்தேன், மருதநாயகம் கண்டிப்பாக வரும், உங்களை பார்த்தவுடன் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது, 23ம் புலிகேசி, இந்திரலோகம் போன்ற படங்களில் நடித்த உங்களை ஹீரோவாக வைத்து அந்த படத்தை எடுக்கலாம் என்றிருக்கிறேன், உங்களின் எட்டு வருட கால்ஷீட் அதற்கு தேவைப்படலாம். டைரக்டர் பாலாவும் நானும் இணைந்து இயக்கும் எண்ணமும் உள்ளது.

வடிவேலு: (மனதிற்குள்) இவருக்கு நம்ம மேல இவ்ளோ கோபம்.ஒருவேளை விஜயகாந்த் மூலமா எதுவும் சதி நடக்குதோ.

ரொம்ப நன்றி கமலய்யா ஆனா எனக்கு ஹீரோ வேசமெல்லாம் வேண்டாம்யா ஹீரோயினியோட ஒரேயொரு குத்து டான்ஸ் மட்டும் வெச்சு ஒரு காமெடி ரோல் மட்டும் போதும்யா சம்பளம் கூட வேண்டாம், அப்புறம் மருதநாயகம் படத்துல விஜயகாந்த ஹீரோவா போட்டு ஒரு பத்து வருடம் வெளிநாட்டுல சூட்டிங் வெச்சுக்கிட்டா உங்களுக்கு புண்ணியமா போகும்யா?

கமல்ஹாசன் : உங்களின் திறமையை நீங்கள் இன்னும் உணரவில்லை என்று நான் எண்ணவில்லை வியாபாரிகளின் சினிமாவில் நீங்கள் ஒரு விட்டில்பூச்சி, இதை நான் சொல்வதால் நான் விட்டில்பூச்சி இல்லை என்று அர்த்தம் கொண்டால் அது என்னுடைய தவறல்ல.

வடிவேலு: (மனதிற்குள்)பார்த்திபன் என்னை வேற மாதிரி குழப்புனாரு,ஆனா இவரு தெளிவா பாராட்டியே குழப்புறாரே.

அய்யா உங்களுக்கும் கவுதமிக்கும் பிரச்சினைன்னு?

கமல்ஹாசன் : நான் என் வீட்டில் ஜன்னல் வைத்திருப்பது நான் காற்று வாங்கவும், நான் வெளி உலகத்தையும் பார்க்கவுமே நீங்கள் எட்டிப்பார்ப்பதற்கு அல்ல, இப்படி என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கேள்வி தேவையில்லாதது இது உங்களுக்கும் பொருந்தும் மற்றவர்களுக்கு பொருந்தாது என்று பொருள் அல்ல.வெளிநடப்பு செய்கிறார்.

வடிவேலு: அய்யா நான் தேவர்மகன் படத்துல உள்ள சீன பத்திதானே சொன்னேன் அதுக்கு ஏன்யா கோபபடுறீங்க, நான் ஒரு கைப்புள்ள அடித்தவங்க விசயத்திலெல்லாம் தலையிட மாட்டேன்யா..............

வருங்கால முதல்வர் யார் ?


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
புரட்சி கலைஞர் விஜயகாந்த்
நாட்டாமை சரத்குமார்
நவரச நாயகன் கார்த்திக்
டாக்டர். விஜய்.
சகலகலாவல்லவன் விஜய.டி.ராஜேந்தர்.
புரட்சிப்புயல் வடிவேலு
புரட்சித்தமிழன் சத்தியராஜ்
புரட்சி நாயகி திரிசா
தாராள நாயகி நயந்தாரா
வறட்சி நாயகி சினேகா

இவங்க எல்லாம் வருங்கால முதல்வர் ஆகுறாங்களோ இல்லையோ
ஆனா நான் ஆயிட்டேன்

என்று வாழப்போகிறாய் மானத்துடன் மனித இனமாய்...!?


இறுகிப்போன இதயத்தில்

அருகிப்போன குருதி.

தேங்கி நிற்கிறது -நாங்கள் இங்கு

ஏங்கி நிற்கையில்.

தேக்கிய தண்ணீரில்

தீர்ந்து போனது

உன் தாகம் மட்டுமல்ல

மனித நேயமும் தான்.

மணமோடு வாழாவிட்டாலும்

பிணமாக வாழ்ந்தெதைக் கண்டாய்?

சினமும் சீற்றமும்

பிணத்துக்கும் வருமோ?

தண்ணீர் கேட்டால்

வேதனையில் வெந்நீர் ஊற்றும்

வெற்றுக் களிமண் நீ!

தொற்று நோயாய்

எங்கள் வாழ்வில்!

என்றென்றும் வாலாட்டும்

வானரமாய்!

நாளெல்லாம்

நச்சரிக்கும் நரி நீ!

வரிந்து கட்டிக்கொண்டு

நிற்கிறாய் மானம் இழந்து!

இனத்திற்கு மானமுண்டு

பிணத்திற்கு மானமுண்டோ?

என்று வாழப்போகிறாய்

மானத்துடன் மனித இனமாய்...!?